/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
திறன்மிக்க இன்ஜினியர்களுக்கு தேவைகள் அதிகம்
/
திறன்மிக்க இன்ஜினியர்களுக்கு தேவைகள் அதிகம்
ஏப் 18, 2025 12:00 AM
ஏப் 18, 2025 12:00 AM

அறிவியல், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் - இந்த மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை, முதலில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இருப்பதை கண்டுபிடிப்பது அறிவியல். இல்லாத ஒன்றை உருவாக்குவது பொறியியல்.
கண்டுபிடித்ததை சமூகத்திடம் கொண்டு சேர்ப்பது தொழில்நுட்பம்.சிறந்த இன்ஜினியர் ஆக வேண்டுமெனில், கணிதத்திறன், புதிய கண்டுபிடிப்பு , லாஜிக்கல் சிந்தனை, புதிய சிந்தனைகள், தொழில்நுட்ப திறன், அனலிடிக்கல் திறன், குழுவுடன் இணைந்து பணிபுரியும் செயல்பாடுகள், தொடர்புத்திறன், மொழிப்புலமை, சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை ஏற்று செயல்படும் திறன், தொடர்ந்து கற்றல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஐ.ஓ.டி., ஏ.ஐ., டிஜிட்டல் பிரிண்ட்ஸ், ரோபோடிக்ஸ், 3டி பிரிண்டிங், ஆட்டோமேஷன், மெஷின் லேர்னிங், உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. கோர் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்வது, சிறந்த வாய்ப்புகளை தரும்.
இந்தியாவில், 2030ல் 6 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தை மேம்படுத்த ஆட்டோமேஷன் துறை முக்கிய பங்கு வகிக்கும். இதுபோன்ற சூழலில், திறன்மிக்க இன்ஜினியர்களின் தேவை அதிகம் தேவைப்படும்.
-ரமேஷ்குமார், பேராசிரியர், மெக்கானிக்கல் துறை, அமிர்தா பல்கலை