sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

எம்.ஐ.டி., - உலக அமைதி பல்கலைக்கழகம் !

/

எம்.ஐ.டி., - உலக அமைதி பல்கலைக்கழகம் !

எம்.ஐ.டி., - உலக அமைதி பல்கலைக்கழகம் !

எம்.ஐ.டி., - உலக அமைதி பல்கலைக்கழகம் !


ஏப் 21, 2025 12:00 AM

ஏப் 21, 2025 12:00 AM

Google News

ஏப் 21, 2025 12:00 AM ஏப் 21, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஐ.டி., - உலக அமைதி பல்கலைக்கழகம் என்பது மகாராஷ்டிர மாநிலம், புனே நகரத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் பல்கலைக்கழகம். இது 1983ம் ஆண்டு மகாராஷ்டிரா தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரில் நிறுவப்பட்டு, பின் 2017ம் ஆண்டு பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது.

நோக்கம்


இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தரமான கல்வியுடன், உலக அமைதியும், மனிதநேயமும் சார்ந்த மதிப்பீடுகளை மாணவர்களிடம் வளர்க்கும் முயற்சியாகும். இக்கல்வி நிறுவனம் 150க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.

தரவரிசை


*டைம்ஸ் பி-ஸ்கூல் சிறந்த தனியார் பல்கலைக்கழகங்கள் பிரிவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
*என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில் இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களில் 116வது இடத்தைப் பிடித்துள்ளது.
*என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில் இந்தியாவின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

பாடப்பிரிவுகள்


தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல், கலை, வடிவமைப்பு, சுகாதாரம், சட்டம் மற்றும் வர்த்தகத் துறைகள் பல்வேறு துறைகளில் இளநிலை படிப்புகளை எம்.ஐ.டி., உலக அமைதி பல்கலைக்கழகம், புனே வழங்குகிறது. பி.இ.,/பி.டெக்., பி.எஸ்சி., பி.ஏ., பி.பி.ஏ, பி.காம்., பி.சி.ஏ., பி.டெஸ்., பி.பார்ம் போன்ற பட்டங்களை வழங்குகிறது.

சிறப்பு பாடப்பிரிவுகள்


பி.டெக்.,- செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், பி.பி.ஏ.,- சர்வதேச வணிகம் / டிஜிட்டல் மார்க்கெட்டிங் /பின்டெக், பி.எஸ்சி., -தரவு பகுப்பாய்வுடன் பொருளாதாரம், பி.டெஸ்., - யுஎக்ஸ்/யுஐ, அனிமேஷன், விளையாட்டு வடிவமைப்பு, பி.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நிலைத்தன்மை ஆகிய சிறப்பு இளநிலை பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

முதுநிலை படிப்புகள்


எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.சி.ஏ., எம்.காம்., எம்.டெஸ்/எம்.எப் ஏ., பிஎச்.டி ஆகிய முதுநிலை பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகள்

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
* பி.டெக்., + எம்.டெக்., பி.பி.ஏ.,+எம்.பி.ஏ., பி.எஸ்சி.,+ எம்.எஸ்சி., பி.டெஸ்+எம்.டெஸ்., பி.சி.ஏ.,+எம்.சி.ஏ.,

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 6 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றன. இதில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பும், 3 ஆண்டுகள் பி.டெக் படிப்பும் வழங்கப்படுகின்றன.

டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்

*சமையல் தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பு
*பேக்கரி மற்றும் பேட்டிசரி
*புகைப்படக்கலை

சர்வதேச மாணவர் சேர்க்கை


வெளிநாட்டு மாணவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் (பி.ஐ.ஓ.,) / இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் (ஓ.சி.ஐ.,), வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), சார்க் / ஆப்பிரிக்க / ஆசியான் நாட்டு மாணவர்களுக்கான சேர்க்கை வாய்ப்பை வழங்குகிறது. ஆங்கில மொழித்திறன் சான்றிற்காக ஐ.இ.எல்.டி.எஸ்.,/டோபல் போன்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
பொறியியல் (பி.டெக்., எம்.டெக்.,), மேலாண்மை (பி.பி.ஏ., எம்.பி.ஏ.,), மருந்தகம் (பி.பார்ம்., எம்.பார்ம்.,), லிபரல் ஆர்ட்ஸ், சட்டம், வணிகம், வடிவமைப்பு, கட்டடக்கலை, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு, அறிவியல் (பி.எஸ்சி., எம்.எஸ்சி.,), சுகாதார அறிவியல் (பிபிடி, நர்சிங், ஆப்டோமெட்ரி) ஆகிய பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வுகள்


யு.ஜி.,-சி.இ.டி.,:
இத்தேர்வு பல்கலைக்கழகத்தால் பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இளநிலை படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒரு பொது நுழைவுத்தேர்வு ஆகும். தேர்வு பொதுவாக ஆன்லைன் முறையில் நடத்தப்படும். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் யு.ஜி.,-சி.இ.டி.,தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பி.ஜி.,-சி.இ.டி.,:

இளநிலை முடித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

யு.ஜி.,-சி.இ.டி., தேர்வுக்கு மே 10, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சர்வதேச மாணவர்கள் ஏப்ரல் 30, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிஎச்.டி., படிப்பிற்கு மே 15, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

விபரங்களுக்கு:

https://mitwpu.edu.in/







      Dinamalar
      Follow us