தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/படிப்பில் சிறக்க உதவும் நேர மேலாண்மை உத்திகள்!

படிப்பில் சிறக்க உதவும் நேர மேலாண்மை உத்திகள்!

படிப்பில் சிறக்க உதவும் நேர மேலாண்மை உத்திகள்!


மார் 13, 2026 04:40 PM

மார் 13, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

மார் 13, 2026 04:40 PM மார் 13, 2026 04:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவப் பருவத்தில் படிப்பு, தேர்வுகள், நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் சமாளிப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். 'நேரமே போதவில்லை' என அடிக்கடி பல மாணவர்கள் கவலை கொள்வார்கள்.

அவர்களது நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு, மன அழுத்தமில்லாமல் படிக்க உதவும் 8 முக்கியமான வழிமுறைகள்:


காலெண்டரைப் பயன்படுத்தலாம்

தேர்வுகள், சமர்ப்பிக்க வேண்டிய நாட்கள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே ஒரு காலெண்டரில் குறித்து வைக்கலாம். அது மொபைல் காலெண்டராகவோ அல்லது சுவரில் மாட்டும் காலெண்டராகவோ இருக்கலாம்; ஆனால் அதைத் தினமும் பார்ப்பது அவசியம்.

'ரிமைண்டர்'கள் வைக்கலாம்

வெறும் தேதிகளை மட்டும் குறித்து வைத்தால் போதாது; அந்தத் தேதிக்கு முன் செய்ய வேண்டிய வேலைகளுக்கும் நினைவூட்டல்கள் அவசியம்.

அட்டவணையை உருவாக்கலாம்

மாணவர்கள் அவர்களுக்கு ஏற்ற அட்டவணையை உருவாக்கலாம். அதில் அவர்கள் எப்போது சுறுசுறுப்பாக செயல்படுவார்கள் என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு கடினமான பாடங்களை படிக்கலாம்.

சரியான கருவிகளைப் பயன்படுத்தலாம்

நேரத்தைத் திட்டமிட எது வசதியாக இருக்கிறதோ, அதை பயன்படுத்துவதே சிறந்தது. சிலருக்கு 'டைரி'யில் எழுதி வைப்பது பிடிக்கும், சிலருக்கு 'மொபைல்' செயலிகள் பிடிக்கும். மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக எதையும் பின்பற்றாமல், அவர்களுக்கு எது வசதியாக இருக்குமோ அதை பயன்படுத்துவதே நல்லது.

முன்னுரிமை கொடுப்பது

எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. இன்று முடிக்க வேண்டிய மிக முக்கியமான வேலை எது? எதை நாளை செய்யலாம்? என்பதைத் சரியாக தீர்மானிக்க வேண்டும்.

ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குங்கள்

நேர மேலாண்மை என்பது நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருப்பது அல்ல. மனநலத்தை பாதுகாக்க பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட நேரத்தை ஒதுக்கலாம். போதிய தூக்கம் மற்றும் ஓய்வு இருந்தால் தான், படிக்கும் போது மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

உதவி


சில நேரங்களில் எல்லா பாடங்களையும் தனியாக அமர்ந்து படிக்க இயலாது. அந்த சமயத்தில் கடினமான பாடங்களை நண்பர்களுடன் சேர்ந்து படிக்கலாம். ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்திக் கொள்வது படிப்பை எளிதாக்கும்.

யதார்த்தத்தை உணருங்கள்


சில நேரங்களில் திட்டமிட்டபடி எதுவும் நடக்காமல் போவது இயல்பு தான். அதே நேரத்தில் ஒரு நாளில் எத்தனை வேலை செய்ய முடியும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து அட்டவணையை அமைக்க வேண்டும். எதிர்பாராத தடங்கல்கள் வந்தால் பதறாமல், அதற்கேற்ப திட்டத்தை மாற்றிக் கொள்வதும் அவசியம்.

இவ்வாறு நேர மேலாண்மையை சிறப்பாக கையாண்டால், தேர்வு நேரங்களில் பாடங்களை படிப்பது எளிதாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us