sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இவைதான்!

/

நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இவைதான்!

நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இவைதான்!

நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இவைதான்!


ஆக 07, 2014 12:00 AM

ஆக 07, 2014 12:00 AM

Google News

ஆக 07, 2014 12:00 AM ஆக 07, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்வு, தமிழகத்தில் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.

இன்றைய நிலையில் தமிழகத்தில் மட்டும் 530க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தான் அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதேசமயம், கவுன்சிலிங் நிறைவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே இருக்கின்றன. இது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து முடித்த பிறகு, படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில், தொழில்நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்புகளை பொறியியல் கல்லூரிகள் பூர்த்தி செய்கின்றனவா? என்பதே இன்றைய பிரதான கேள்வி.

பெரும்பாலான கல்லூரி விளம்பரங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் தொழில் நிறுவனங்களின் ஆய்வின்படி, 25 முதல் 30 சதவிதம் பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வேலைக்கான திறன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டிற்கும் ஏதோ இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. படித்த படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வேலை செய்வது என்பது சரியான எம்பிளாயபிலிட்டி ஸ்டேன்டர்டுஆக கருதமுடியாது.

கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? என்றால், ‘இல்லைஎன்பது தான் பதில். அதே எதிர்ப்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றன. உற்பத்தி துறைக்கும், தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால், அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை.

பாசிட்டிவ் எனர்ஜி

எந்த ஒரு நிறுவனமும் நேர்காணலில் Attitudeக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. எந்தளவுக்கு நிறுவனத்திற்கு பாசிட்டிவ்ஆக இருப்பார் என்பதை சில கேள்விகள் மூலம் சோதிப்பார்கள். உதாரணமாக, வேலைக்கான நேர்காணலில் வெளியூர்களில் வேலை செய்யத்தயாரா? என்ற கேட்கப்படலாம். அந்த நிறுவனத்திற்கு சென்னையில் தேவை இல்லாமல் இருக்கலாம்; உண்மையில், பெங்களூருவில் ஆட்கள் தேவைப்படலாம். அப்போது நான் சென்னையில் மட்டும்தான் வேலை செய்வேன்என்று கூறும்பட்சத்தில், அவர் தனக்கான வாய்ப்பை குறைத்துக்கொள்கிறார். அதேநபரிடம், வெளிநாடுகளில் வேலை செய்யத் தயாரா? என்றால், உடனடியாக, ‘தயார்என்று சொல்லக்கூடும். இதைத்தான், ஆங்கிலத்தில் குளோபலி பிளக்சிபில்; லோக்கலி இம்மொபைல்என்று சொல்வார்கள்.

நிலைத்து நிற்பாரா?

ஒருவர் எத்தனை நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வார் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு, பெரும்பாலானோர் ஓய்வு பெறும்வரை ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். அரசுத் துறைகளில் இந்தநிலை மிக அதிகம் என்றாலும், தனியார் துறையிலும் அதிகமாக காணப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வின்படி, சராசரியாக 5 முதல் 8 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்பட்டது.

அதே தற்போதைய ஆய்வின்படி, ஒருவர் 2 முதல் 3 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது பெரிய விஷயமாக இருக்கிறது. எனவே, குறைந்த ஆண்டுகளே வேலை செய்வார் என்று தோன்றும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய நிறுவனங்கள் யோசிக்கும். கிரிக்கெட்டில் ‘20-20’க்கும் டெஸ்ட் மேட்ச்க்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே உதாரணமாக கூறலாம். ‘டெஸ்ட் மேட்ச்போன்று நிரந்தரமாக நின்று வேலை செய்பவர்களையே இன்றைய நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றன.

தீர்வு காணும் திறன்

பொறியியலில் சிவில், மெக்கானிக்கல், .டி., .சி.., ..., என எந்த பிரிவை படித்தவராக இருந்தாலும், சிறந்த Problem Solving Skills’, ‘Logical and Analytical Thinkingதிறனை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. நேர்முகத் தேர்வில் ஒரு தர்க்கத்தை கொடுத்து, அதை சரியாக பிரித்து, முன்னுரிமை அடிப்படையில் வரிசையாக அதற்கு தீர்வு அளிக்க முடிகிறதா? என்பது பரிசோதிக்கப்படுகிறது. எனவே இவற்றை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் பயிற்சி அளிக்க வேண்டும்; மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும்.

துறை சார்ந்த அறிவு

கல்லூரியில் எந்த பிரிவு படித்திருந்தாலும், அந்த துறையில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு உள்ளதா? என்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்து முதல் மதிப்பெண் பெற பள்ளிக் கல்வியில் முடியும். ஆனால், கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே தேர்வாகினாலும், எந்த ஒரு வேலைக்கான நேர்காணலிலும், புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை. செயல்முறைத் திறன் அடிப்படையிலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும்.

குழுவாக செயல்பட முடியுமா?

மாணவர்களுக்கு குழுவாக செயல்பட சில கல்லூரிகள் மட்டுமே போதிய பயிற்சி அளிக்கின்றன. ‘மாணவிகளிடம் பேசக்கூடாதுஎன்று கூறும் கல்லூரிகள் இன்றளவும் உள்ளன. ஆனால், பொதுவாக நிறுவனங்களில் இருபாலரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டியது அவசியம். ‘தனிமனிதாக வெற்றி பெற்றுவிட்டேன்; ஆனால் குழு தோற்றுவிட்டதுஎன்றாலும், உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காது. எனவே, குழுவாக இணைந்து செயல்படும் திறன் உங்களிடம் உள்ளதா? அனைவரிடமும் சகஜமாக பழக முடிகிறதா? என்பதை நிறுவனங்கள் தெளிவாக பரிசோதிக்கும்.

தொடர் கற்றல்

ஒரு மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை இன்றும் பயன்படுத்தி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தால் அவர் ஒதுக்கப்படுவார். எந்த துறையாக இருந்தாலும் துறை சார்ந்த தொடர் கற்றல், நவீன அறிவு ஆகியவை அவசியம். இவையும் நேர்முகத் தேர்வில் பரிசோதிக்கப்படும்.

தகவல் தொடர்புத் திறன்

இன்றும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் கம்யுனிகேஷன் ஸ்கில்ஸ்’. அனைத்து திறன்களும் உங்களுக்கு இருந்தாலும், அவற்றை மற்றவருக்கு அழகாக வெளிப்படுத்த பேச்சுத் திறமை அவசியம். தகவல் தொடர்பில் ஆங்கிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

-சுஜித் குமார், மனிதவள மேம்பாட்டு ஆர்வலர்






      Dinamalar
      Follow us