sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஆங்கிலமும் உங்கள் வசமாகும்!

/

ஆங்கிலமும் உங்கள் வசமாகும்!

ஆங்கிலமும் உங்கள் வசமாகும்!

ஆங்கிலமும் உங்கள் வசமாகும்!


ஆக 07, 2014 12:00 AM

ஆக 07, 2014 12:00 AM

Google News

ஆக 07, 2014 12:00 AM ஆக 07, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‘உலகமே ஒரு கிராமம்’ என்ற கருத்திற்கேட்ப இன்று சர்வதேச அளவிலான கல்வி, வேலை, வியாபாரம், சுற்றுலா அனைத்தும் சர்வ சாதரணமாகிவிட்டது. இவை அனைத்திற்கும் ஆங்கிலம் அவசியம் என்ற நிலையும் உருவாகி விட்டது.

ஆங்கில அறிவு உலகளாவிய நோக்கித்திலான எண்ணங்களையும், தன்னம்பிக்கையையும் தரும். புதியதாக எந்த ஒரு மொழியையும் கற்பதில் என்றுமே தவறில்லை. அதற்காக தாய்மொழியை விட்டுவிடக்கூடாது. ‘தாய்மொழி உயிர்; ஆங்கிலம் வாழ்க்கை’ என்று ஒரு கல்வியாளர் கூறியதையும் ஞாபத்தில் கொள்ளுங்கள்.

எந்தமொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பின்வரும் ஆலோசனைகளை உங்களது வாழ்வில் பயன்படுத்த துவங்குங்கள்... விரைவில் உங்களுக்குள் ஒரு மாற்றம் தெரியும்.

* ‘ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி; நம்மால் கற்க முடியாது...’ போன்ற எதிர்மறையான எண்ணங்களை முதலில் உங்களது மனதில் இருந்து முழுவதுமாக அகற்றுங்கள். ‘எந்த மொழியையும் என்னால் கற்க முடியும். ஆங்கிலமும் ஒரு மொழி தான்; அதையும் என்னால் கற்க முடியும்’ போன்றநேர்மறையான எண்ணங்களை ஆழ்மனதில் பதியுங்கள்.

* தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஆங்கில சிறுகதை, கட்டுரை,  கவிதை போன்றவற்றை வாசியுங்கள்.

* ஆங்கிலத்தில் எழுதப் பழகுங்கள்... போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

* நீங்கள் கேட்ட, வாசித்ததில் புரியாத வார்த்தைகளை குறித்துக்கொண்டு அதற்கான அர்த்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பழக்கமாகவே தொடருங்கள்.

* தவறாகப் பேசி விடுவோம்... மற்றவர்கள் ஏளனத்திற்கு ஆளாகிவிடுவோம்... போன்ற எண்ணங்களை அடியோடு தகர்ந்தெரிந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசப் பழகுங்கள்.

* ஆங்கில டி.வி செய்தி சேனல்களை பாருங்கள். பிரிட்டிஷ் மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள பி.பி.சி., சேனலையும், அமெரிக்க மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள சி.என்.என்., சேனலையும், இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள இந்திய ஆங்கில செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.

*  ஆங்கில ‘சப் டைட்டில்’ உடன் வெளியிடப்படும் ஆங்கில திரைப் படங்களையும் பார்க்கலாம். அதன்மூலம், பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களுடன் ஆங்கில உச்சரிப்பையும் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள முடியும்.

* இன்று ஏராளமான இணையதளங்கள், மொபைல் அப்ளிகேசன்ஸ் போன்ற தொழில்நுட்ப வசதிகளும் ஒரு மொழியைக் கற்கவும், புலமை பெறவும் பெரிதும் துணைபுரிகின்றன என்பதையும் மறக்க வேண்டாம்.

* தனிமையில் உங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள்.

* எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.

* ‘டிக்ஸ்னரி’ (அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

* ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில புத்தகத்தை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

* உங்களைப் போன்றே ஆங்கிலம் கற்க ஆர்வமாக இருப்பவர்களை உங்கள் நண்பராக்கிக் கொள்ளுங்கள். அவர்களிடம் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கலந்துரையாடுங்கள். எங்கே தவறாக பேசிவிடுமோ என்ற தயக்கம், கூச்சம் அப்போது வெகுவாக குறையும்.

* துவக்கத்தில் கண்டிப்பாக பிளைகள் இருக்கும். அவற்றை நீங்களே உணரவும் முடியும். நீங்கள் பேச நினைப்பதன் சில வார்த்தைகள் தாய்மொழியில் தான் உங்களது நினைவுக்கு வரும். அதுபோன்ற வார்த்தைகளை குறித்து வைத்துக்கொண்டு, அதற்கு சரியான ஆங்கில வார்த்தையை கண்டறிந்து அதை அடுத்தமுறை பயன்படுத்துங்கள். இவ்வாறு தொடர்ந்து பயிற்சி பெறுங்கள்.

* ஆங்கிலத்தில் ‘டய்ரி’ எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.

இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு, பயிற்சி பெறுங்கள்.

ஆங்கிலமும் விரைவில் உங்கள் வசமாகும்!






      Dinamalar
      Follow us