ஜூலை 03, 2025 12:00 AM
ஜூலை 03, 2025 12:00 AM

சுற்றுலா மற்றும் கலாசார பாரம்பரிய துறையில் உயர் தகுதியுடன் நிபுணர்களை உருவாக்கும் நோக்கில், உஸ்பெகிஸ்தானில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு உதவித்தொகை வழங்குகிறது.
சில்க் ரோடு இண்டர்நேஷனல் டூரிசம் அண்டு கல்ச்சுரல் ஹெரிடேஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுநிலை பட்டப்படிப்புகள்:
* மேலாண்மை
* சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்
* தொல்லியல்
* கலை மற்றும் கட்டட நினைவுச்சின்னங்களை மறுசீரமைத்தல்
* அருங்காட்சியகம், வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல்.
பயிற்று மொழி:
ஆங்கிலம்
தகுதிகள்:
* உரிய துறையில் இளநிலை பட்டப்படிப்பு
* ஐ.இ.எல்.டி.எஸ்., டோபல், சி.இ.எப்.ஆர்., போன்ற ஆங்கில மொழிப்புலமை தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண்
உதவித்தொகை விபரம்:
ஆண்டுக்கு ஒரு முறை உஸ்பெகிஸ்தான் சென்று வர விமானக் கட்டணம், மாதம் 600 அமெரிக்க டாலர் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சென்றுவர 200 அமெரிக்க டாலர்.
விபரங்களுக்கு:
https://www.education.gov.in