/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
11ம் வகுப்பில் என்ன 'குரூப்' எடுக்கலாம்..
/
11ம் வகுப்பில் என்ன 'குரூப்' எடுக்கலாம்..
மே 20, 2025 12:00 AM
மே 20, 2025 12:00 AM

பத்தாம் வகுப்பு நிறைவு செய்யும் தருணத்தில், எதிர்காலம் பற்றி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. அடுத்த எந்த 'குரூப்'பை தேர்வு செய்யலாம், எந்த துறையில் எதிர்காலம் இருக்கும், என்ற வினாக்கள் மாணவர்களின் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், தெளிவாக சிந்தித்து, உரிய ஆலோசனையின் அடிப்படையில் 'குரூப்'பைத் தேர்வு செய்வது முக்கியம்.
உதாரணமாக, மருத்துவம், பொறியியல், வர்த்தகம், கலை, ஊடகம், விவசாயம், சட்டம் போன்ற படிப்புகளுக்கு ஏற்ப சரியான குரூப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
அறிவியல் 'குரூப்'
மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற உயர்தர துறைகளை நோக்கிச் செல்லும் வாய்ப்புகளை அறிவியல் பாடப்பிரிவுகள் வழங்குகின்றன.
உயிரியல் 'குரூப்':
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் அடங்கும். இது மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி, நர்சிங் போன்ற துறைகளுக்கான படிப்பாக உள்ளது.
முக்கியத் தேர்வு:
நீட்
கணிதப் பிரிவு:
இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடங்கள் அடங்கும். இது பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்குத் தேவையான அடித்தளமாக இருக்கும்.
முக்கியத் தேர்வு:
ஜே.இ.இ.,
காமர்ஸ் 'குரூப்'
வணிகம் மற்றும் கணக்குப்பதிவில் ஆர்வமுள்ளவர்கள் இந்த குழுவை தேர்ந்தெடுக்கலாம். பாடங்களில் கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல் மற்றும் கணினி அறிவியல் அடங்கும்.
மாணவர்கள் பி.காம்., பி.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., சி.எம்.ஏ., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளுக்குத் தயார் செய்யலாம். இந்த பிரிவு வங்கி, பங்கு சந்தை, நிறுவன மேலாண்மை போன்ற துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற வழி வகுக்கும்.
கலை மற்றும் சமூக அறிவியல் 'குரூப்'
இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல், தமிழ், ஆங்கிலம், சமூகவியல் போன்ற பாடங்களை விரும்புவோர் இந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம். இது சட்டம், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஊடகம், ஆசிரியர் பயிற்சி, மொழிபெயர்ப்பு, பத்திரிகையியல் போன்ற துறைகளுக்கு வழிகாட்டும்.
பிரிவைத் தேர்வு செய்யும் முன்:
*மாணவர்கள் தங்களுக்கான விருப்பங்கள், திறமைகள், ஆர்வங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும்.
*எதிர்கால வேலை வாய்ப்புகள், பட்டப்படிப்பு வாய்ப்புகள் பற்றி அறிய வேண்டும்.
*நண்பர்கள், பெற்றோர் விருப்பத்தின் பேரில் குழுவைத் தேர்வு செய்வது தவறான முடிவை ஏற்படுத்தலாம்.