ஜூன் 12, 2025 12:00 AM
ஜூன் 12, 2025 12:00 AM

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் இணைப்புடன் சென்னையில் செயல்படும், வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அறிமுகம்
தனிப்பட்ட அமைதி வாயிலாக உலக அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு, கடந்த 1958ம் ஆண்டு, உலக சமுதாய சேவா சங்கத்தை வேதாத்திரி மகரிஷி நிறுவினார். இந்த இலக்கை அடைய, எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகாவை உருவாக்கி, 'மனவளக்கலை யோகா' என்ற பெயரில் மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கான நடைமுறைகளுடன் கூடிய கல்வியாக வழங்கினார்.
உடல், மன, உணர்ச்சி, சமூக-பொருளாதார மற்றும் ஆன்மீக நல்வாழ்வு இணைந்த ஆரோக்கியத்தை அனைவரும் பெறும் வகையில், தமிழகத்தின் முதல் யோகா கல்லூரி உலக சமுதாய சேவா சங்கத்தால், கடந்த 2017ம் ஆண்டு துவக்கப்பட்டது.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.எஸ்சி., - மனித மேன்மைக்கான யோகா - 3 ஆண்டுகள்
எம்.எஸ்சி., - மனித மேன்மைக்கான யோகா - 2 ஆண்டுகள்
பிஎச்.டி., - மனித மேன்மைக்கான யோகா - 3 முதல் 5 ஆண்டுகள் வரை
கல்வித்தகுதி:
பி.எஸ்சி., படிப்பிற்கு 12ம் வகுப்பும், எம்.எஸ்சி., படிப்பிற்கு எதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பும், பிஎச்.டி., படிப்பிற்கு யோகாவில் முதுநிலை பட்டப்படிப்பும் கல்வித்தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டங்கள்:
மனித உடல் கூறியல் மற்றும் உடலியக்கங்கள், பதஞ்சலி யோகா சூத்திரங்கள், யோகாவின் அடிப்படைகள், உடல் மற்றும் மனவள யோகா, பாரம்பரிய யோகப்பயிற்சிகள், நவீன கால யோகா, யோகா உணவு முறைகள், குண நலப்பேறும் சமூதாய நலனும், இயற்கை சிகிச்சை முறைகள், யோக சிகிச்சை முறைகள், பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகள், உலக சமூதாய வாழ்க்கை நெறி உட்பட பல்வேறு பாடத்திட்டங்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 30
விபரங்களுக்கு:
https://vethathiriyogacollege.edu.in/

