/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
இன்ஜினியரிங் படிக்கும்போதே தொழில்முனைவோராக திகழலாம்
/
இன்ஜினியரிங் படிக்கும்போதே தொழில்முனைவோராக திகழலாம்
இன்ஜினியரிங் படிக்கும்போதே தொழில்முனைவோராக திகழலாம்
இன்ஜினியரிங் படிக்கும்போதே தொழில்முனைவோராக திகழலாம்
மே 05, 2025 12:00 AM
மே 05, 2025 12:00 AM

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவை அடிப்படை இன்ஜினியரிங் துறைகள். அடிப்படை இன்ஜினியரிங் துறைகளே உலகை ஆள்கின்றன; இனி உலகை ஆளப்போகும் துறைகளும் இவைதான்.
இன்ஜினியரிங் இல்லாத துறைகளே இல்லை. தற்போது அனைத்து துறைகளும் ஆட்டோமேஷன் சார்ந்த பெரிய அளவில் மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் அடைந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த, இன்ஜினியரிங் கட்டமைப்பு தற்போது இல்லை.
படிக்கும் போதே ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக, தொழில்முனைவோராக திகழமுடியும். தற்போதுள்ள இன்ஜினியரிங் கட்டமைப்பில், சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, ஐ.ஓ.டி., என அனைத்து துறை மாணவர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
சிவில் படிக்கும் மாணவர் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த அறிவையும், எலக்ட்ரானிக்ஸ் மாணவன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட அறிவையும் ஒருங்கிணைந்து பெறுகிறார். இன்ஜினியரிங் பிரிவில் ஆர்வம் உள்ள எந்த துறையையும், தேர்வு செய்து படிக்கலாம்.
திறன்கள், தன்னம்பிக்கை மேம்படுத்திக்கொண்டால் சிறப்பான எதிர்காலத்தை பெறலாம். படிக்கும் காலங்களில், அரசு, தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் கண்டுபிடிப்பு சார்ந்த போட்டிகளில், கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
- பேராசிரியர் பொற்குமரன், கிருஷ்ணா கல்விக்குழுமம், கோவை.

