/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
பட்டயக்கணக்காளர்கள் பணிக்கு ஓய்வு இல்லை
/
பட்டயக்கணக்காளர்கள் பணிக்கு ஓய்வு இல்லை
மே 03, 2025 12:00 AM
மே 03, 2025 12:00 AM

அறிவியலை தேடிச் செல்லும் மாணவர்களுக்கு இணையாக, வணிகவியலை தேடும் மாணவர்களின் எண்ணிக்கையும் உள்ளது.
வணிகவியலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சி.ஏ., படிப்பில் சாதிக்க முடியும். எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்நிறுவனத்துக்கு பட்டயக்கணக்காளரின் தேவை முக்கியம். மிகவும் பொறுப்புள்ள பதவி. பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் சி.ஏ., படிப்புக்கு பதிவு செய்யலாம்.
பிளஸ் 2 முடித்த பின் தேர்வு எழுதலாம். இதில் பவுண்டேஷன், இன்டர்மீடியேட், இறுதி என, மூன்று நிலைகள் உள்ளன. ஆண்டுக்கு மூன்று முறை தேர்வுகள் நடக்கும். பதிவு செய்த நான்கு மாதங்களுக்கு பின்னர் தேர்வு எழுதினால், தோல்விகளை தவிர்க்கலாம். பவுண்டேஷன் படிக்கும் போது, கல்லுாரிகளில் சேர எவ்வித தடையும் இல்லை.
பவுண்டேஷன் முடித்த பின், இன்டர்மீடியேட் வரும். இதில் ஆறு தாள்கள் நடக்கும். தனித்தனி தாள்களில், குறிப்பிட்ட சதவீதம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண்ணிலும் குறிப்பிட்ட சதவீதம் பெற்றிருப்பது அவசியம். ஒன்பது லட்சம் மாணவர்கள் இக்கல்வியை பயில்கின்றனர்.
தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களும் பட்டயக்கணக்காளராக முடியும். இக்கல்விக்கு ஏராளமான கல்வி உதவித்தொகையும் உள்ளது. ஓய்வு என்பதும் கிடையாது.
-ராஜேஷ், தென்னிந்திய கவுன்சில் உறுப்பினர், ஐ.சி.ஏ.ஐ.,

