/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தருவதே கல்வி
/
எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தருவதே கல்வி
எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தருவதே கல்வி
எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தருவதே கல்வி
ஏப் 29, 2025 12:00 AM
ஏப் 29, 2025 12:00 AM

அரசு தரப்பில் மட்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், 75 தேர்வுகளில் பிளஸ் 2 மதிப்பெண்களை பெரிதாக எடுப்பதில்லை.
நுழைவுத்தேர்வுகள் குறித்து அறிந்துகொள்ளாமல் இருப்பது, வாய்ப்புகளை தவற விடுவதற்கு சமம். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்களே, வெற்றியாளர்களாக திகழ முடியும். மிக குறைந்த கட்டணத்தில், தரமான கல்வி தரும் அரசு நிறுவனங்கள் பல உள்ளன. அதை அறிந்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் எழுத வேண்டும்; பலவற்றில் விண்ணப்பித்தாலே வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.
அறிவு என்பதுதான் அதிகாரம், பணம் அனைத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களின் வேகத்திற்கு இணையாக, நாம் திறன்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.ஆர்வம் உள்ள துறை, வேலைவாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து, படிப்பது கல்வி அல்ல.
உலகின் எந்த இடத்திலும், எப்படிப்பட்ட சவால்களையும் சமாளித்து விடுவேன் என்ற தன்னம்பிக்கையை அளிப்பதே கல்வி; அதுபோன்ற தன்னம்பிக்கை வரும் வகையில், நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றி என்பது எளிதல்ல; கடுமையான பல முயற்சி, பயிற்சிகளுக்கு பின்னரே கிடைக்கும். தன்னம்பிக்கையை மேம்படுத்தி, வாய்ப்புகளை பயன்படுத்தும் அனைவரும், கட்டாயம் சாதனையாளர்களாக திகழ முடியும்.
-நெடுஞ்செழியன், கல்வியாளர்

