ஏப் 28, 2025 12:00 AM
ஏப் 28, 2025 12:00 AM

இன்றைய மாணவர்களுக்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தியர்கள் வானியலில் சாதித்துள்ளனர். இன்று பேசும் பொருளாக வானியல் உள்ளது.
கடந்த, 50 ஆண்டுகளில் வானியல் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. மனித வளத்தின் அடுத்த கட்டம், வானியல் ஆராய்ச்சி தான். அடுத்த கோள்களில் வசிக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தான், இன்று முன்னணியில் உள்ளன. ஆகவே, வானியல் துறையில் உள்ள எந்த படிப்பை வேண்டுமானாலும் படிக்கலாம்.
இயற்பியல் படிப்பை படித்தால் வானியலில் சாதிக்கலாம். வானியல் குறித்த கல்விக்கு, ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. செயற்கைகோள்களை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்ய, மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
சந்திரன் குறித்த ஆராய்ச்சியில், இந்தியா முன்னணியில் உள்ளது. சந்திரனின் முழுத்தகவல்களையும் உலகிற்கு, இந்தியா தான் கொடுத்துள்ளது. நீங்கள் வானியல் அறிவை கற்றுவிட்டால் உலகளவில் சாதிக்கலாம். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம். என்ன படிக்கிறீர்களோ, அதில் சாதிக்க முடியும்.
-ராஜராஜன், இயக்குனர், சதீஸ் தவான் விண்வெளி மையம், ஐ.எஸ்.ஆர்.ஓ., ஸ்ரீஹரிகோட்டா.

