/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஆட்டோமேஷன் துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்
/
ஆட்டோமேஷன் துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்
ஏப் 25, 2025 12:00 AM
ஏப் 25, 2025 12:00 AM

ஆட்டோமேஷன் துறையில் வளர்ச்சி, மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அதற்கேற்ப நாம் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
புத்தகங்கள், வகுப்பறைகளை தாண்டி, திறன்களை வளர்த்திக்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். உணவு, உற்பத்தி, வேளாண்மை, மருத்துவம் அனைத்திலும், ஆட்டோமேஷன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிகள் அதிகம் உள்ள, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை தேர்வு செய்வதை காட்டிலும், போட்டிகள் குறைவாக உள்ள ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் துறையை தேர்வு செய்வது, வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, எந்த துறை நிலைத்து நிற்குமோ, அத்துறையில் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனை மற்றும் கண்டுபிடிப்பு, கிரிட்டிக்கல் திங்கிங், பிராப்ளம் சால்விங் மற்றும் அனலிடிக்கல் திங்கிங் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்ள். அனைத்து துறைகளும் ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் துறை சார்ந்து நகரும் சூழலில், இத்துறையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
-பேராசிரியர் சவுந்தரராஜன்

