தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதலில் கோடு எண், பின்பு கல்லுாரி பெயர் தேர்வு செய்தால் குழப்பம் இன்றி விரும்பிய கல்லுாரியில் சேரலாம்: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன்

முதலில் கோடு எண், பின்பு கல்லுாரி பெயர் தேர்வு செய்தால் குழப்பம் இன்றி விரும்பிய கல்லுாரியில் சேரலாம்: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன்

முதலில் கோடு எண், பின்பு கல்லுாரி பெயர் தேர்வு செய்தால் குழப்பம் இன்றி விரும்பிய கல்லுாரியில் சேரலாம்: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன்


UPDATED : ஜூன் 15, 2026 06:20 PM

ADDED : ஜூன் 15, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 06:20 PM ADDED : ஜூன் 15, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுாரில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் பேசியதாவது:

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம், விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்கள், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகளுக்கு 150 இடங்கள், அரசு பள்ளியில் படித்தவருக்கு 7.5 சதவீதம் என்ற அடிப்படையில், மாணவர்கள் கல்லுாரியில் சேர இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த ரேங்க் லிஸ்ட் பொதுப்பிரிவு மற்றும் சாதிவாரி என இரண்டு வகையில் ஒதுக்கப்படுகிறது. பொதுவாக இன்ஜினியரிங் இடங்கள், தேர்வு செய்யும் முறையில் (சாய்ஸ் பில்லிங்) நிரப்பப்படுகிறது. கடந்தாண்டு ஒரு மாணவர் 650 (சாய்ஸ் பில்லிங்) தேர்வு செய்தார். அதில் அவர் 11 வது இடத்தில் இருந்த கல்லூரியில் சேர்ந்தார்.

பொதுவாக கல்லுாரி தேர்வு செய்வதற்கு (சாய்ஸ் பில்லிங்) குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலும், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் இருக்கும்.

முக்கியமாக மாணவர்கள் கல்லுாரி தேர்வு செய்யும்போது, முதலில் கல்லுாரி கோடு எண்கள் மற்றும் கல்லுாரி பெயரை தெளிவாக தேர்வு செய்யவும். ஏனென்றால் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகள் இருக்கும்.

எனவே கல்லுாரி கோடு எண்களை தேர்வு செய்து, பின்பு கல்லுாரியை தேர்வு செய்யவதால் குழப்பம் இல்லாமல், விருப்பப்பட்ட கல்லுாரியில் சேரலாம். ஆன்லைனில் கல்லுாரி தேர்வு செய்ய மூன்று நாள் மட்டுமே அவகாசம் இருக்கும். அதன் பின்பு தானாகவே லாக் ஆகிவிடும். அடுத்து இரண்டு நாட்களுக்குள் கன்ஃபர்மேஷன் தேர்வு செய்ய வேண்டும்.

இதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும். இந்த இரண்டு நாட்கள் தான் மிக மிக முக்கியமான நாட்களாகும். அடுத்து தேர்ச்சி பெறாத மாணவர்கள், மறுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்பதற்காக, மூன்றாவது சுற்று கவுன்சிலிங் நடைபெறும். இதில் 10000 இடங்கள் கூட நிரப்புவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us