தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்வி நிறுவன வடிவமைப்புகளை அரசு பெற்றுக் கொள்ளும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி

டாட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்வி நிறுவன வடிவமைப்புகளை அரசு பெற்றுக் கொள்ளும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி

டாட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்வி நிறுவன வடிவமைப்புகளை அரசு பெற்றுக் கொள்ளும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி


UPDATED : ஜூன் 20, 2026 09:42 AM

ADDED : ஜூன் 20, 2026 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 09:42 AM ADDED : ஜூன் 20, 2026 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
“டாட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்வி நிறுவனம் வாயிலாக, மாணவர்கள் உருவாக்கும் வடிவமைப்புகளை, தமிழக அரசு பெற்றுக் கொள்ளும்,” என, காதி மற்றும் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அம்பத்துாரில் உள்ள 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' கல்வி நிறுவனம் சார்பில், அக்கல்லுாரியில் படித்த மாணவர்களுக்கு, மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 'டிசைன்' கண்காட்சி, தரமணியில் உள்ள ஐ.ஐ.டி.எம்., ஆராய்ச்சி நிலைய அரங்கில் நேற்று நடந்தது.

இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதாவது:


முந்தைய அரசின் போது ஓர் அமைச்சர் வந்தால், அது எந்த மாதிரி அணுகுமுறையாக இருக்கும் என்பது, உங்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது, மக்கள் சர்வ சாதாரணமாக சட்ட சபைக்குள் வந்து சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

கைத்தறி துறைக்குள் சால்வை, போர்வை என்பன மட்டுமே அனைவருக்கும் தெரிந்ததாக உள்ளது. ஆனால், இன்னும் பல தயாரிப்புகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த கல்வி நிறுவனம் வாயிலாக, மாணவர்கள் உருவாக்கும் வடிவமைப்புகளை, எங்கள் கூட்றவு அமைப்புக்கு பயன்பெறும் வருகையில், தமிழக அரசு பெற்றுக் கொள்ளும்.

நெசவாளர்களின் திறமையும், உங்களுடைய வடிவமைப்பும் ஒன்று சேர்ந்தால், இந்த துறை பெருமளவில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் மாறும். வரும் ஆக., 7ம் தேதி, கைத்தறி தினத்தன்று நெசவாளர்களுக்கான, 'வெற்றித் தறி' எனும் திட்டத்தை, முதல்வர் விஜய் துவக்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தற்போதைய சூழலில், தொழில் நிறுவனங்கள், ஐ.டி., துறை மற்றும் மெக்கானிக்கல் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும், 'டிசைன்' தேவையான ஒன்று. அந்த தேவைகளுக்கு, பிரத்யேகமாக உள்ள 'டிசைன்' கல்லுாரிகளில் படிப்போர் தேவைப்படுவர் இங்கு, 'சமூகப் பொறுப்புள்ள வடிவமைப்புகள்' எனும் தலைப்பில், எங்கள் மாணவர்களின், 200க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு இந்த படிப்புகள் குறித்து தெரிய வேண்டும் என்ற நோக்கில், 'டிசைன்' கண்காட்சி நடந்தது.

- ராம்நாத், தலைவர், 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' கல்லுாரி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us