தினமலர் - சிட்டி இணைந்து நடத்தும் இலவச ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சி
தினமலர் - சிட்டி இணைந்து நடத்தும் இலவச ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சி
UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 01:24 PM
சென்னை:
தினமலர் நாளிதழும், குழந்தைகளுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி பயிலரங்குகளை நடத்தி வரும், சிட்டி பயிற்சி நிறுவனமும் இணைந்து, வரும் 25ம் தேதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு, ஆன்லைன் வழியாக, ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சி வகுப்பை இலவசமாக நடத்துகின்றன.
ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், ஏரோ மாடலிங் சயின்ஸ் மீது ஆர்வம் உடைய குழந்தைகள், இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். வரும் 25ம் தேதி சனிக்கிழமை, காலை 10:00 முதல் பகல் 12:30 மணி வரை இரண்டரை மணி நேரம் பயிற்சி வகுப்பு நடக்கும்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுடன், அவர்களின் பெற்றோரும் ஆன்லைன் பயிற்சியில் உடன் இருக்கலாம். பயிற்சி வகுப்புக்கு என்னென்ன பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து, முன்பதிவு செய்தவர்களுக்கு, 24ம் தேதி தகவல் அளிக்கப்படும்.
இந்த பயிற்சி வகுப்பு குறித்து, சிட்டி பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் ஆனந்த் கூறியதாவது:
ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சி வகுப்பில், விமான இயக்கம் பற்றிய அறிமுகம், விமான வடிவமைப்பின் அடிப்படைகள், விமான வடிவமைப்பின் தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான செய்முறை பயிற்சிகள் வழங்கப்படும்.
பெற்றோர் தங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்தில் மாற்றத்தை கொண்டு வர, இந்த பயிற்சி வழிவகுக்கும். பறவைகளை காட்டி, அது எப்படி பறக்கிறது; அதன் பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி ஆசிரியர் பாடம் நடத்தி இருக்காவிட்டால், அப்துல் கலாம் உருவாகியிருக்க மாட்டார்.
தங்களது குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை மேலும் துாண்டி சாதனை படைக்க, பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், இந்த செய்தியில் உள்ள, 'கியூ.ஆர்., கோடு' வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும்.