UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 01:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சி:
கேரளாவில் கவர்னர் ஆரிப்முகமது கானால் தேர்வு செய்யப்பட்ட பல்கலை., துணைவேந்தர்கள் நியமனத்தை ரத்து செய்து அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரள கவர்னராக ஆரிப் முகம்மது கான் உள்ளார். இம்மாநில பல்கலைகழங்களில் துணைவேந்தர்கள் கவர்னரால் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முகமது நியாஸ் பிறப்பித்த உத்தரவில், துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள பல்கலை. சட்டம் 1974-ன் விதிமுறைகளை பின்பற்ற பெறவில்லை. எனவே தற்போது நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக துணைவேந்தர்களை நியமனம் செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.