தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் ரத்தாகும் என்றால் ஒரு கோடி கையெழுத்து வாங்கி தருகிறோம்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

நீட் ரத்தாகும் என்றால் ஒரு கோடி கையெழுத்து வாங்கி தருகிறோம்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

நீட் ரத்தாகும் என்றால் ஒரு கோடி கையெழுத்து வாங்கி தருகிறோம்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்:
கையெழுத்து போட்டால் நீட் தேர்வு ரத்தாகும் என்றால் ஒரு கோடி கையெழுத்து வாங்கித் தருகிறோம், என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த 52 ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., 520 தேர்தல் வாக்குறுதிகளில் நுாற்றுக்குநுாறு நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.உண்மையாக இருந்தால் நாங்கள் இங்கு கூட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. நடப்பது அனைத்துமே பொம்மலாட்ட வேலைகளாக, மக்களுக்கு நன்மை செய்யாத ஏமாற்றுகிற ஆட்சி தான் நடக்கிறது. காஸ் மானியம் ரூ.100 என்றார்கள். இதுவரை கொடுக்கவில்லை. எனது தந்தை போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்குத்தான் என உதயநிதி கூறினார். ஆனால் இதுவரை நடக்கவில்லை.ஆனால் தற்போது 50 லட்சம் கையெழுத்து இயக்கம் என்கின்றனர். கையெழுத்துப் போட்டால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றால் நாங்களே ஒரு கோடி கையெழுத்து வாங்கித் தருகிறோம். கையெழுத்து வாங்கினால் நீட் தேர்வு ரத்தாகும் என நாடகம் ஆடுகின்றனர். கஞ்சா, போதைப் பொருட்கள் பெருகி அதன் மூலமாக தினமும் கொலை,கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது, என்றார்.நகர செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், ,பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பரமசிவம், மகளிரணி துணை செயலாளர் எம்.சந்திரபிரபா, தலைமை நிலைய பேச்சாளர்கள் புரட்சித்தம்பி, குமுதாபெருமாள், மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.செல்வராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் கே.கே.கருப்புச்சாமி, பி.சண்முகராஜ், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் கே.பி.வி.மனோகரன், பேரூர் செயலாளர் இ.குப்புச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் பழனியம்மாள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us