sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எங்கே போனது அந்த வீரியமும் வேகமும்?: உடைந்து உருக்குலைந்து போன அரசு ஊழியர் சங்கங்கள்!

/

எங்கே போனது அந்த வீரியமும் வேகமும்?: உடைந்து உருக்குலைந்து போன அரசு ஊழியர் சங்கங்கள்!

எங்கே போனது அந்த வீரியமும் வேகமும்?: உடைந்து உருக்குலைந்து போன அரசு ஊழியர் சங்கங்கள்!

எங்கே போனது அந்த வீரியமும் வேகமும்?: உடைந்து உருக்குலைந்து போன அரசு ஊழியர் சங்கங்கள்!


UPDATED : டிச 02, 2025 07:50 AM

ADDED : டிச 02, 2025 07:51 AM

Google News

UPDATED : டிச 02, 2025 07:50 AM ADDED : டிச 02, 2025 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த ஆட்சியில், வீரியமுடன் செயல்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், தி.மு.க., ஆதரவு சங்கத்தினரால் பல சங்கங்களாக உடைக்கப்பட்டு, போராட்டங்கள் நீர்த்துப் போக செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த அ.தி.மு.க,, ஆட்சியில், தி.மு.க., - கம்யூ., ஆதரவு பெற்ற அனைத்து சங்கங்களும், ஆதரவு பெறாத உதிரி சங்கங்களும் இணைந்து, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அனைத்து துறை சார்ந்த விஷயங்களிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தின.

ஊக்கத்தொகை அதில், கடந்த 2017 செப்.,ல் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையன், ஜெயகுமார், உதய குமார் ஆகிய அப்போதைய அமைச்சர்கள் நடத்திய பேச்சு, அடுத்து, அப்போதைய முதல்வர் பழனிசாமி பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், வேலைநிறுத்தம் செய்யப்பட்டது.

அதில், நீதிமன்றம் தலையிட்டு, 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்க காலக்கெடு விதித்ததுடன், போராட்ட நாள்களையும் பணி நாளாக்கியது. கடந்த, 2019, ஜன.,ல், ஜாக்டோ - ஜியோ சார்பில், 10 நாட்கள் நடந்த வேலைநிறுத்தத்தில், 17,686 பேர் கைது; 2,338 பேர் பணியிடை நீக்கம்; 7,898 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பின், பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக போராட்டம் கைவிடப்பட்டது. இவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. கடந்த, 2020, ஏப்., 28ல், கொரோனா ஊரடங்கால், 2021 ஜூன் 30 வரை அகவிலைப்படி உயர்வும், அக்., 3ல், உயர் கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியமும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2021, தேர்தல் அறிக்கையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்; இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என, தி.மு.க., தெரிவித்து, ஆட்சிக்கு வந்தது.

தி.மு.க.,வின் முதல் சட்டசபை கூட்டத்தில், 110 விதியின் கீழ், '2016, 2017, 2019ம் ஆண்டுகளில் நடந்த போராட்ட நாட்கள், பணி நாட்களாக முறைப்படுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதேசமயம், தன் தேர்தல் அறிக்கைக்கு மாறாக, மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி, உயர் கல்விக்கு ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும் என, அறிவித்தார்.

மறு உத்தரவு ஏற்கனவே, 2009ல், தி.மு.க., ஆட்சியில்தான், மத்திய அரசு ஊதியத்துக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அ.தி.மு.க., ஆட்சியில், ஓராண்டுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை , மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்தது.

கடந்த 2021 ஆக., 5ல், தலைநகர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட அறிவிப்பை அடுத்து, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், முதல்வரை சந்தித்ததால் போராட்டம் ரத்தானது. மீண்டும், 2023, ஏப்., 11ல், தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் நடத்திய பேச்சால் ரத்தானது.

அதே சமயம், உயர் கல்விக்கான ஊக்கத் தொகைக்காக காத்திருந்தோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிராக, 2024, பிப்., 15ல், அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் வேலு, முத்துசாமி, மகேஷ் ஆகியோர் பேசியதாலும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டதாலும், பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் எனக்கூறி, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ரத்து செய்தது.

ஆனால், பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்படி, அ.தி.மு.க., ஆட்சியில் வீரியமாகவும், தி.மு.க., ஆட்சியில் ஏனோதானோ என்றும், ஜாக்டோ - ஜியோ செயல்படுவதாக, அதன் போராட்டங்களில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

சுய லாபம் இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:


இதுவரை, 40க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடுகின்றனர். அந்த போராட்டம், தி.மு.க.,வினரின் போலி சங்கங்களால் நீர்த்துப் போய் விட்டன.

முக்கியமாக, 'ஊழியருக்குப் பதில் ஊழியர்கள், சங்கத்துக்குப் பதில் கழகம், ஆசிரியருக்குப் பதில் ஆசிரியர்கள் , கழகத்துக்குப் பதில் கூட்டமைப்பு' என, ஒரே பெயரில் சிறு மாற்றத்தை மட்டும் செய்து, அதுதான் உண்மையான பதிவு பெற்ற சங்கம் என்பதுபோல, முதல்வரையும், அமைச்சர்களையும் சந்தித்து, சுய லாபமடைகின்றனர்.

இதனால், உண்மையான சங்க நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால், போராட்டங்களும் பெயரளவுக்கு நடக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us