sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 13, 2026 ,பங்குனி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெங்களூரு தினமலர் அலுவலகத்தில் பொது நுாலகம் திறப்பு; தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் உற்சாகம்

/

பெங்களூரு தினமலர் அலுவலகத்தில் பொது நுாலகம் திறப்பு; தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் உற்சாகம்

பெங்களூரு தினமலர் அலுவலகத்தில் பொது நுாலகம் திறப்பு; தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் உற்சாகம்

பெங்களூரு தினமலர் அலுவலகத்தில் பொது நுாலகம் திறப்பு; தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் உற்சாகம்


UPDATED : பிப் 07, 2026 10:24 AM

ADDED : பிப் 07, 2026 10:26 AM

Google News

UPDATED : பிப் 07, 2026 10:24 AM ADDED : பிப் 07, 2026 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் உற்சாகத்திற்கு மத்தியில், பெங்களூரு, 'தினமலர்' அலுவலகத்தில் பொதுநுாலகம் நேற்று திறக்கப்பட்டது.

'தினமலர்' நாளிதழின், 75வது ஆண்டு பவளவிழாவின் ஒரு பகுதியாக, பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, தினமலர் அலுவலகத்தில் பொது நுாலகம் அமைக்கப்பட்டது.

இந்நுாலகத்திற்கு, 'கடல் தாமரை புத்தக பூங்கா' என்ற பெயர் சூட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. ஆசிரியைகள் குத்துவிளக்கேற்றினர். சரியாக மதியம், 12:15 மணிக்கு நுாலக திறப்புக்காக பூஜை நடந்தது.

சிவாஜி நகர், காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், பிரதான அர்ச்சகர், ராஜா பாலசந்திர சிவம் பூஜை செய்தார். பெங்களூரு தினமலர் மூத்த செய்தி ஆசிரியர் ராமசுப்பிரமணியன், ரிப்பன் வெட்டி நுாலகத்தை திறந்து வைத்தார்.

புத்தகம் வெளியீடு


தங்கவயல் எழுத்தாளர் பரிமளா சேகர் எழுதிய, 'திருச்சி நகர சிவன் கோவில்களின் மகிமை பாகம் - 2' புத்தகம் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பெ.கணேஷ் எழுதிய, 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் ஜெ.பி.விஜயகுமார் எழுதிய, 'திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும், புதிர்களும்' என்ற புத்தகத்தை தியாகராஜநகர் எஸ்.வி.சி.கே., பள்ளியின் தலைவர் லட்சுமிபதி, பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இராசுமாறன், பெங்களூரு தமிழ்ச்சங்க காமராஜர் உயர்நிலை பள்ளியின் தாளாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

எழுத்தாளர்கள்


திறப்பு விழாவில் பங்கேற்க காலையில் இருந்தே, தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் உற்சாகமாக வருகை தந்தனர்.

நிகழ்ச்சியில் பெங்களூரு புனித வளனார் பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியை சரளா ஆறுமுகம்; பெங்களூரு தமிழ்ச்சங்க காமராஜர் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, கணித ஆசிரியை அமுதா; தியாகராஜநகர் எஸ்.வி.சி.கே., பள்ளி தமிழ் ஆசிரியர் பாபு, ஆசிரியைகள் கீதா, அம்சா, கார்த்திகா; காந்தி வித்யாசாலா பெருமாள் பி.யு., கல்லுாரி முதல்வர் முரளி, மாணவர்கள் யுவராஜ், சந்தோஷ், ஹெச்.ஏ.எல்., தெய்வானையம்மாள், தமிழ் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லதா ராம்குமார், ஆசிரியைகள் லீமா, ஷாலினி; யஷ்வந்த்பூர் தாகூர் மெம்மோரியல் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி, ஆசிரியர் ஆன்டோ ஜோசப், ஆசிரியை தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் பாரம்பரியம்


நுாலகத்திற்கு, 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக கொடுத்த வேணுகோபால், அவரது சகோதரரும், கணினி பொறியாளருமானயது நந்தன், 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய ஜே.பி.,நகரில் வசிக்கும் அருண் குமார் ராமமூர்த்தி, பெங்களூரு தமிழ்ச்சங்க துணை செயலர் சு.பாரி, தங்கவயலில், 50 ஆண்டுகளுக்கு மேலாக நுாலகம் நடத்தும் பிரபுராம், தங்கவயலை சேர்ந்த வக்கீல் மாலதி, கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர் ஸ்ரீவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

நுாலகம் திறக்கப்பட்ட பின், விழாவில் பங்கேற்றோர், புத்தகங்களை ஆர்வத்துடன் புரட்டி பார்த்து படித்து மகிழ்ந்தனர். விழாவில் பங்கேற்ற எழுத்தாளர்கள், பள்ளி முக்கியஸ்தர்கள் தினமலர் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் தமிழர் பாரம்பரிய முறைப்படி தலைவாழை இலையில், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இது போன்ற தமிழ் புத்தகங்கள் அடங்கிய நுாலகத்தை திறந்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

எண்ணிலடங்கா பொருட்கள்


தங்கள் நிறுவன விழாவுக்கு வருவோரை, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பும் பழக்கம் தினமலருக்கு கிடையாது என்பதை அனைவரும் அறிவர். நுாலக திறப்பில் பங்கேற்றோருக்கு, 'கடல் தாமரை' புத்தகம், திருக்கடையூர் அபிராமி அம்மன் படம், மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி உருவப்படம் மற்றும் அக்கோவில்களின் பிரசாதம், கரிமலை வாசன் அய்யப்ப சேவா சங்கத்தின் பிரசாதம், வெள்ளியில் பொறிக்கப்பட்ட லட்சுமி உருவப்படம்.

திருநெல்வேலி அல்வா, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ், சாத்துார் கருப்பட்டி மிட்டாய், செவ்வாழை, ஆரஞ்சு பழம், ஜெ.பி.விஜயகுமார் எழுதிய திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும் புத்தகம், கே.சத்யமூர்த்தி எழுதிய சிவசக்தி மற்றும் அவரது சீடர்கள் மஹாவிஷ்ணு மற்றும் மஹாலட்சுமி 108 திவ்ய தேச கோவில்கள் புத்தகம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், சாக்லெட் தொகுப்பு அடங்கிய, 'தினமலர் - தாமரை பிரதர்ஸ்' பதிப்பகத்தின் பை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us