மத்திய, மாநில அரசுகளின் அயலக படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக மாணவர்களிடம் விழிப்புணர்வு குறைவு
மத்திய, மாநில அரசுகளின் அயலக படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக மாணவர்களிடம் விழிப்புணர்வு குறைவு
UPDATED : மே 08, 2026 09:59 PM
ADDED : மே 08, 2026 10:00 PM

மதுரை:
மத்திய அரசின் ரூ.ஒரு கோடி அளவிலான தேசிய அயலக படிப்புக்கான கல்வி உதவித்தொகையை பெற தமிழக மாணவர் களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
மத்திய, மாநில அரசுகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வெளிநாடுகளில் உயர்கல்வி பெறுவதற்காக கல்வி உதவித்தொகை வழங்குகின்றன. இதில் மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை மாணவர்களின் தேவைக்கேற்ப (ரூ. ஒரு கோடி என்றாலும்) வழங்கப்படும்.
மாணவர்கள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது 35 க்குள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், கலை என எந்த பிரிவு படிக்க விரும்புவோரும், ஆய்வு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கடந்தாண்டு 125 பேர் இந்த உதவித்தொகையை பெற்றுள்ளனர். இந்த உதவித்தொகையைப் பெற மகாராஷ்டிரா, டில்லி போன்ற மாநிலங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். கர்நாடகாவில் 5 பேர், கேரளாவில் 3, ஒருங்கிணைந்த ஆந்திராவில் 9 பேர் வரை பெற்றுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் கடந்தாண்டு 5 பேர் விண்ணப்பித்து ஒருவரே உதவித்தொகை பெற்றுள்ளார். புதுச்சேரியில் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை. இதற்கான வழிமுறைகள் தெரியாததும், ஆவணங்களை சமர்ப்பிப்பதில் உள்ள இடர்பாடுகளுமே இதற்கு காரணமாக உள்ளது.
அதே போல தமிழக அரசும் கல்விஉதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வழங்குகிறது. இதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மதம்மாறிய பட்டியலினத்த வரும் மே 5 முதல் ஒருமாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை பெற கடந்தாண்டு 613 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு அரசு ரூ.65 கோடி ஒதுக்கியது. இதில் 215 பேர் பயன்பெற்றனர். இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறதுஅதற்கேற்ப புதிய அரசு நிதியை முடிவு செய் யும்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் மோசஸ் ரா ஜசேகரன் கூறுகையில், “பிற மாநிலங்கள் அளவுக்கு தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை. ஜூன் முதல் வாரம் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. சந்தேகங்களுக்கு 9842 8 08606ல் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

