UPDATED : மே 08, 2026 09:57 PM
ADDED : மே 08, 2026 09:59 PM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த முறை, 122 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சியை கொடுத்தன; இம்முறை இது, 113 ஆக குறைந்துள்ளது. 2025 ல், 18 அரசு பள்ளிகள் நுாற்று நுாறு சதவீத தேர்ச்சியை கொடுத்தன; இம்முறை இது, 14 ஆக குறைந்துள்ளது.
அரசு பள்ளிகள்
தாராபுரம், குண்டடம், வடுகப்பட்டி, எலுகாம்வலசு, நத்தக்காடையூர், கருவலுார், ஊத்துக்குளி, அவிநாசி, பிற்படுத்தப்பட்டோர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மூலனுார் ஆகிய பள்ளிகள், 2025ல் நுாற்றுக்கு நுாறு சென்டம் ரிசல்ட் கொடுத்தன; இம்முறை இப்பள்ளிகள் நுாறு சதவீதம் பெறவில்லை.
அதே நேரம், கடந்த முறை நுாறு சதவீதம் பெற்ற தளவாய்பட்டிணம், மூலனுார், புதுப்பை, பெருந்தொழுவு, வி.கள்ளிபாளையம், கானுர்புதுார், சூரியப்பம்பாளையம், திருப்பூர் மாவட்ட மாதிரி பள்ளி உடுமலை, மாதிரி பள்ளி மூலனுார் ஆகியவை மீண்டும் சென்டம் ரிசல்ட் பெற்று தந்து, கல்வித்துறையின் பாராட்டு பெறுகின்றன.
நடப்பு, 2026 தேர்ச்சியில் ராமச்சந்திராபுரம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, தேவனுார் புதுார், கன்னிவாடி, கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை வழங்கி, அசத்தியுள்ளது.
சறுக்கிய மெட்ரிக் பள்ளிகள்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த முறை, 99 மெட்ரிக் பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத மதிப்பெண் தந்தன. இம்முறை, இந்த எண்ணிக்கை, 94 ஆக குறைந்துள்ளது. கடந்த முறை, வி.எம்.சி.டி.வி., தாயம்பாளையம், மாணிக்கசுவாமி நாயுடு பள்ளி, கோவிந்தாபுரம், தாராபுரம், சாந்தி நிகேதன் பள்ளி, ஊதியூர் ஆகிய மூன்று பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத ரிசல்ட் கொடுத்தன; இம்முறையும் இப்பள்ளிகள் சென்ட் ரிசல்ட் கொடுத்து, பாராட்டு பெறுகிறது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, மு.ந. முருகப்ப செட்டியார் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகள் பட்டியல் சென்டம் பெற்று, நடப்பாண்டு இணைந்துள்ளது. கடந்த முறை, தாராபுரம், என்.சி.பி., மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. இம்முறை இப்பள்ளி நுாறு சதவீதம் பெறவில்லை.
மாநகராட்சி பள்ளிக்கு பாராட்டு
கடந்த முறை, நுாறு சதவீதம் தேர்ச்சியை பெற்றுத்தந்த புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி, இம்முறையும் நுாற்றுக்கு நுாறு சதவீதம் பெற்று பாராட்டை பெறுகிறது. இப்பள்ளியில், கடந்த முறை, 150 மாணவியர் தேர்வெழுதி, 150 பேரும் தேர்ச்சி பெற்றனர். இம்முறை, 143 பேர் தேர்வெழுதி, 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
