தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி அசத்திய அரசு பள்ளிகள்

90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி அசத்திய அரசு பள்ளிகள்

90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி அசத்திய அரசு பள்ளிகள்


UPDATED : மே 08, 2026 09:53 PM

ADDED : மே 08, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 09:53 PM ADDED : மே 08, 2026 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் உடுமலை பகுதியில், 5 அரசுப்பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சியும், பெரும்பாலான பள்ளிகள், 90 சதவீதத்துக்கும் அதிகமாக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் உடுமலை பகுதியில், அரசு மாதிரி பள்ளி, ஜல்லிபட்டி, குடிமங்கலம், ராமச்சந்திராபுரம் மேல்நிலைப்பள்ளி, தேவனுார்புதுார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

90 சதவீதத்துக்கும் மேல் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி 90.9; வாளவாடி 94.7; மடத்துக்குளம் 96.6; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.4; பூளவாடி 98.6; உடுக்கம்பாளையம் 98.2; குமரலிங்கம் 96.3; ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி 97.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதே போல், எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி 88.2; பெதப்பம்பட்டி 89.1; காரத்தொழுவு 88.9; உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 89.0 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில், ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, உடுக்கம்பாளையம், பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு, பூளவாடி ஆகிய பள்ளிகளில் தலா ஒரு மாணவன் மட்டும் தேர்ச்சி பெறாததால், நுாறு சதவீத தேர்ச்சியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us