ஐ.ஐ.டி., பட்டம் வேண்டாம், திறமை தான் முக்கியம்; உயர் தொழில்நுட்ப பதவிகளில் இந்தியர்கள் சாதனை!
ஐ.ஐ.டி., பட்டம் வேண்டாம், திறமை தான் முக்கியம்; உயர் தொழில்நுட்ப பதவிகளில் இந்தியர்கள் சாதனை!
UPDATED : செப் 25, 2026 09:49 AM
ADDED : செப் 25, 2026 09:51 AM
ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெறாமலேயே திறமையால் மட்டுமே, ரெட்டிட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அமித் புண்டம்பேகர், ஓபன் ஏ.ஐ.,யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜயே ராஜி, ஆந்த்ரோபிக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராகுல் பாட்டீல் ஆகியோர் சாதனை புரிந்திருப்பது, பாராட்டை பெற்றுள்ளது.
சமீபத்தில் புகழ்பெற்ற டைம் இதழ், உலகின் 50 செல்வாக்குமிக்க தொழில்நுட்பத் தலைவர்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டு இருந்தது.
இந்த பட்டியலில் ரெட்டிட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அமித் புண்டம்பேகர், ஓபன் ஏ.ஐ.,யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜயே ராஜி, ஆந்த்ரோபிக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராகுல் பாட்டீல் மற்றும் வால்மார்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுரேஷ் குமார் உட்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, இவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.ஐ.டி., நிறுவனங்களில் பட்டம் பெறாமல், தனது திறமையால் மட்டுமே இந்த உச்சத்தை எட்டியுள்ளனர்.
இந்த சாதனையை நிகழ்த்திய முக்கிய இந்திய வம்சாவளித் தலைவர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு:
ராகுல் பாட்டீல்
ஆந்த்ரோபிக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராகுல் பாட்டீல். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், அங்குள்ள பி.இ.எஸ்., பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் பயின்றார்.
ஐ.ஐ.டி., ஹார்வர்ட் அல்லது ஸ்டான்போர்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் படிக்காமல், அமேசான், மைக்ரோசாப்ட், ஆரக்கிள் மற்றும் ஸ்டிரைப் போன்ற நிறுவனங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்திய தனது அனுபவத்தால், முன்னணி ஏ.ஐ., நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.
விஜய் ராஜி
ஓபன் ஏ.ஐ., நிறுவனம் விஜய் ராஜியின் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'Statsig'ஐ வாங்கியது. பிறகு இவர் ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரும் ஐ.ஐ.டி.,யில் படிக்காதவர். இவர் புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
