தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி அருகே அரசு மதுபான கடையை அகற்ற கோரி மக்கள் சாலை மறியல்

பள்ளி அருகே அரசு மதுபான கடையை அகற்ற கோரி மக்கள் சாலை மறியல்

பள்ளி அருகே அரசு மதுபான கடையை அகற்ற கோரி மக்கள் சாலை மறியல்


UPDATED : மார் 11, 2013 12:00 AM

ADDED : மார் 11, 2013 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2013 12:00 AM ADDED : மார் 11, 2013 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பாலைவனம்: பள்ளி அருகே செயல்படும் அரசு மதுபான கடை, மாணவர்களுக்கு இடையூறாகவும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவதால், அதை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

பொன்னேரி பழவேற்காடு சாலையில் உள்ள திருப்பாலைவனம் பேருந்து நிறுத்தம் அருகே, அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இது இங்குள்ள அரசு பள்ளிக்கு மிக அருகில் அமைந்து உள்ளது. திருப்பாலைவனம் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, குடிமகன்கள் இங்கு குடிக்க வந்து செல்கின்றனர்.

இவர்கள் குடித்துவிட்டு, சாலை ஓரங்களிலும், பள்ளி அருகிலும் அமர்ந்து பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளி இடைவேளைகளின் போது, வெளியில் சுற்றித் திரியும் மாணவர்கள், குடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பதால், அவர்கள் மனதில் வீண் சஞ்சலமும் ஏற்படுகிறது.

திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவிலுக்கு செல்பவர்கள், இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்கின்றனர். பேருந்து நிறுத்தம் அருகில், நின்று குடிக்கும் குடிமகன்களால், பயணிகளுக்கும் கோவிலுக்கு செல்பவர்களுக்கும் பெரும் தொந்தரவு ஏற்படுகிறது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன்கருதி, இடையூறாக உள்ள இந்த மதுபான கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பெண்கள் என, 200 பேர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பொன்னேரி - பழவேற்காடு சாலையில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனடியாக தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் சாகீர் சலீம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், ராஜேந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார்.

ஒரு மாத காலத்திற்குள் கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை உறுதி கூறினர். அதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us