தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவில் அழுகிய முட்டைகள் - சமையலர்கள் அலட்சியத்தால் மாணவர்கள் வாந்தி மயக்கம்

சத்துணவில் அழுகிய முட்டைகள் - சமையலர்கள் அலட்சியத்தால் மாணவர்கள் வாந்தி மயக்கம்

சத்துணவில் அழுகிய முட்டைகள் - சமையலர்கள் அலட்சியத்தால் மாணவர்கள் வாந்தி மயக்கம்


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, உலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட, 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, உலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று, மதியம், 12:30 மணிக்கு மாணவ, மாணவியருக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டது. அழுகியிருந்த முட்டைகளை மாற்றித்தரும்படி, சத்துணவு அமைப்பாளர் கென்னடி மற்றும் சமையலர்களிடம் மாணவியர் கூறினர்.

இந்த முட்டைகளை சாப்பிட்டால், ஒன்றும் ஆகாது என, சமையலர்கள் கூறியதால், அதை சாப்பிட்ட சில நிமிடங்களில், மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, பள்ளி வளாகத்தில் சுருண்டு விழுந்தனர். தனியார் பள்ளி வேன் மற்றும் 108 அவசராக ஆம்புலன்ஸ் மூலம், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட, 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சிகிச்சை பெற்றனர்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜீவிதா மேல் சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெற்றோர் பள்ளியில் குவிந்ததால், பதற்றமான சூழல் உருவானது.

மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரி எடுத்து, ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அழுகிய முட்டைகள் வழங்கிய, சத்துணவு அமைப்பாளர், சமையலர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us