sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இ - சேவை மையத்தில் வகுப்பறை இடவசதி இல்லாமல் மாணவர்கள் அவதி

இ - சேவை மையத்தில் வகுப்பறை இடவசதி இல்லாமல் மாணவர்கள் அவதி

இ - சேவை மையத்தில் வகுப்பறை இடவசதி இல்லாமல் மாணவர்கள் அவதி


UPDATED : பிப் 24, 2024 12:00 AM

ADDED : பிப் 24, 2024 08:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2024 12:00 AM ADDED : பிப் 24, 2024 08:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்:
செரப்பனஞ்சேரி ஊராட்சி, நாவலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் இ- சேவை மையக் கட்டடத்தில் இட நெருக்கடியில் கல்வி பயின்று வருகின்றனர்.குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சி, நாவலுார் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 265 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பள்ளி, தொடக்கப் பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயில இட வசதி உள்ள இந்த பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டதால், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது.இந்த நிலையில், கூடுதல் மாணவர்கள் பயில இட வசதி இல்லாததால், 3, 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ - மாணவியர், பள்ளியின் அருகில் உள்ள அரசு இ- சேவை மையக் கட்டடத்தில் இட நெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.மேலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற கழிப்பறை வசதியும் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை கேட்டபோது, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும் என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us