கலகலத்த கோடை கால பயிற்சி முகாம் மலர்ந்தது பெண்கள், குழந்தைகள் முகம்
கலகலத்த கோடை கால பயிற்சி முகாம் மலர்ந்தது பெண்கள், குழந்தைகள் முகம்
UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 10:10 AM

கோவை:
விடுமுறை நாட்களை குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகள் பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில், தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்விக் குழுமம் சார்பில், கலையும் கைவண்ணமும்' என்ற கோடைகால பயிற்சி, அபார்ட்மென்டுகளில் நடந்து வருகிறது.
பத்தாவது நாளாக, இந்நிகழ்ச்சி கணபதியில் உள்ள ஜெம் நிர்மால்யம் ரெசிடென்ஸியில் நேற்று நடந்தது. இதில், கேரள முரல் பெயின்டிங், ஆப்பிரிக்க ஓவியங்கள், அலங்கார ஆபரண தயாரிப்பு, ஆர்ட் அண்ட் கிராப்ட் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு ஆர்ட் ஒர்க், இல்லத்தரசிகளுக்குப் பிடித்த ஜூவல்லரி ஆர்ட்,முதியோருக்கு தஞ்சாவூர் பெயின்டிங் என ஒவ்வொருவரும், ஒவ்வொரு கலைகளைக் கற்றுத் தேர்ந்தனர். சிறுவர்களும், பெண்களும் ஜாலியாகவும், பயனுள்ளதாகவும் பொழுதைக் கழித்தனர்.
பெவிகிரில் நிறுவனத்தின் முன்னணி ஓவிய வல்லுநர்கள் மற்றும் சிறந்த ஆபரண தயாரிப்பாளர்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஜெம் நிர்மால்யம் அசோசியேஷன் பொருளாளர் பிரதீபா, செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரொம்ப ஹேப்பியா இருக்கு
இல்லத்தரசி அறிவுமணி, 38: கேரள முரல் ஆர்ட், தஞ்சாவூர் பெயின்டிங் எல்லாம் ரொம்ப ஈஸியா சொல்லிக் கொடுத்தாங்க. எல்லாருமே ஸ்பீடா பிக்அப் பண்ணிக்கிறதால, எங்களுக்கு கூடுதலா டெரக்கோட்டா ஜூவல்லரி மேக்கிங்கும் சொல்லித்தர்றதா சொல்லிருக்காங்க. பெவிகிரில், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம், தினமலருக்கு மிக்க நன்றி.இல்லத்தரசி ஹேமா, 52: முதல்ல இந்தப் பயிற்சி களைக் கத்துக்க ரொம்பவே பயப்பட்டேன். ஆனா, சிறப்பா பயிற்சி கொடுத்தாங்க. ரொம்ப ஈஸியா இருந்துச்சு. நல்ல எக்ஸ்பீரியன்ஸ்.சிறுமி ஆத்மிகா, 7: இந்த ஆர்ட் ஒர்க் எல்லாம், நான் முதல்முறை பண்றேன். பப்பெட்ஸ், பெயின்டிங் எல்லாம் ரொம்ப பிடிச்சுருக்கு. பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து செய்றது ேஹப்பியாவும், பன்னாவும் இருக்கு.