sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி; இன்று மாலை வரை முன்பதிவு வரவேற்பு

/

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி; இன்று மாலை வரை முன்பதிவு வரவேற்பு

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி; இன்று மாலை வரை முன்பதிவு வரவேற்பு

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி; இன்று மாலை வரை முன்பதிவு வரவேற்பு


UPDATED : ஜன 03, 2025 12:00 AM

ADDED : ஜன 03, 2025 09:09 AM

Google News

UPDATED : ஜன 03, 2025 12:00 AM ADDED : ஜன 03, 2025 09:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
பள்ளி மாணவ, மாணவியருக்கு நாளை நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க இன்று மாலை வரை முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாளை காலை, 8:00 மணிக்கு அண்ணா சைக்கிள் போட்டிகள் கோவைப்புதுார், மின்வாரிய அலுவலகம் முன் துவங்கி, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடைகிறது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு இப்போட்டி நடத்தப்படுகிறது. 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ., மாணவியருக்கு, 10 கி.மீ., 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ., மாணவியருக்கு, 15 கி.மீ., 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ., மாணவியருக்கு, 15 கி.மீ., போட்டி நடக்கிறது.

போட்டியில் பங்கேற்க தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களை இன்று மாலை, 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முதல் மூன்று பரிசுகளாக ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசுகள் வழங்கப்படுகின்றன. 4 முதல், 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படும். இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே போட்டியில் பயன்படுத்த வேண்டும். விபரங்களுக்கு, 74017 03489 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us