sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஏ.ஐ., மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்

/

ஏ.ஐ., மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்

ஏ.ஐ., மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்

ஏ.ஐ., மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்


UPDATED : பிப் 23, 2026 03:31 PM

ADDED : பிப் 23, 2026 03:32 PM

Google News

UPDATED : பிப் 23, 2026 03:31 PM ADDED : பிப் 23, 2026 03:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீரட்:
“டில்லியில் நடந்த உலகளாவிய மாநாட்டை தனது இழிவான அரசியலுக்கான தளமாக மாற்றிய காங்கிரசுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் ரயில்சேவையை பிரதம் மோடி துவக்கி வைத்தார். பல்வேறு நலத்திட்டங்களையும் அர்ப்பணித்தார்.

இதன் பிறகு அவர் பேசியதாவது:

நாட்டின் பழமையான கட்சி எவ்வாறு கொள்கை ரீதியாக திவாலாகி, வறுமையில் வாடி உள்ளது என்பது டில்லியில் நடந்த ஏ.ஐ., மாநாட்டில் அக்கட்சியின் போராட்டம் காட்டுகிறது. சொந்த நாட்டை அவமதிப்பதிலேயே காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. நாட்டின் வெற்றியை சில அரசியல் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடு இந்தியாவில் நடந்ததை பார்த்தோம்.

ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது. இந்தியாவிற்கான உலகளாவிய நிகழ்ச்சியை காங்கிரஸ் தனது இழிவான மற்றும் நிர்வாண அரசியலுக்கான தளமாக மாற்றியது. காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்பு நிர்வாணமாக வந்தனர். நீங்கள் நிர்வாணமாக இருப்பதை நாடு ஏற்கனவே அறியும். பிறகு ஆடையை கழற்ற வேண்டியது ஏன்?

காங்கிரஸ் தலைவர்கள் என்னை வெறுக்கலாம். எனக்காக சவக்குழி தோண்டலாம். எனது தாயாரை அவமதிக்கக்கூட அவர்கள் தயங்கவில்லை. ஏ.ஐ., மாநாடு பா.ஜ.,வின் நிகழ்ச்சி அல்ல என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு பா.ஜ., தலைவர்கள் பங்கேற்கவில்லை. இது தேசிய நிகழ்ச்சி. காங்கிரசின் ஊழல் அரசியலை நாட்டு மக்கள் கண்டிக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.







      Dinamalar
      Follow us