தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி..... ஆங்கில வழி கல்வி மாணவர் சேர்க்கை தொடக்கம்
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி..... ஆங்கில வழி கல்வி மாணவர் சேர்க்கை தொடக்கம்
UPDATED : ஜூன் 12, 2026 07:12 PM
ADDED : ஜூன் 12, 2026 07:14 PM
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆங்கில வழி கல்வியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
சத்திரப்பட்டி அருகே சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டு இதுவரை மூன்று பேட்ச் மாணவர்கள் வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கல்வியாண்டில் ஆங்கில வழியில் 8ம் வகுப்பு முடித்த மாணவர்கள், தமிழ் வழி வகுப்புக்கு மாற்றப்பட்டதுடன் ஆங்கில வழியில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததுடன் ஆங்கில வழி கல்விக்கு தனியார் பள்ளிகளை அதிக பொருட்செலவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. கிராாம பகுதி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தி எதிரொலியாக ஆங்கில வழி வகுப்பில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
