UPDATED : ஜூன் 12, 2026 07:11 PM
ADDED : ஜூன் 12, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: சமூக வளர்ச்சிக்கு தன்னலமின்றிப் பங்காற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 2025 ஏப் 1 முதல் 2026 மார்ச் 31 வரை செய்த சமூகச் சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி, பல்கலை ஊழியர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் ஜூலை 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.
