UPDATED : ஜூன் 12, 2026 07:11 AM
ADDED : ஜூன் 12, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
அரியங்குப்பம்:
அபேஷிகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு மற்றும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சரவணன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா தலைமை தாங்கினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ராமு எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அருளரசன் நன்றி கூறினார்.
