தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலவு சுற்று வட்ட பாதைக்கு இன்று செல்கிறது சந்திரயான் - 3

நிலவு சுற்று வட்ட பாதைக்கு இன்று செல்கிறது சந்திரயான் - 3

நிலவு சுற்று வட்ட பாதைக்கு இன்று செல்கிறது சந்திரயான் - 3


UPDATED : ஆக 05, 2023 12:00 AM

ADDED : ஆக 05, 2023 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2023 12:00 AM ADDED : ஆக 05, 2023 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட, சந்திரயான் - 3 விண்கலம், இன்று நிலவின் சுற்று வட்டப் பாதையில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, மூன்றாவது முயற்சியாக, கடந்த 14ம் தேதி, சந்திரயான் - 3 விண்கலத்தை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோ ஏவியது. புவி வட்டப்பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் - 3 விண்கலம், கடந்த 1ம் தேதி நிலவை நோக்கிய பயணத்தை துவங்கியது.இந்நிலையில், இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நிலவுக்கான பயணத்தில், மூன்றில் இரண்டு பங்கு துாரத்தை, சந்திரயான் - 3 விண்கலம் கடந்துள்ளது. திட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, நிலவின் சுற்று வட்டப் பாதையில் இன்று இரவு 7:00 மணி அளவில், சந்திரயான் - 3 விண்கலம் செலுத்தப்பட உள்ளது. நிலவுக்கு அருகில் விண்கலம் சுற்றி வரும் போது, இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதையடுத்து, வரும் 23ம் தேதி நிலவில் மென்மையாக தரையிறங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us