தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கரூரில் சுய தொழில் துவங்க பயிற்சி: பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கல்

கரூரில் சுய தொழில் துவங்க பயிற்சி: பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கல்

கரூரில் சுய தொழில் துவங்க பயிற்சி: பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கல்


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: "சுய தொழிலில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்குடன் பயிற்சி மையம் செயல்படுகிறது" என்று கரூர் கலெக்டர் ஜெயந்தி பேசினார்.

கரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் குறு மற்றும் சிறு வணிகர்களுக்கான கிளை அலுவலகம் திறப்பு விழா இந்திய ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் நரசிம்மன் முன்னிலையில் நடந்தது.

கரூரில் குறு மற்றும் சிறு வணிகர்களுக்கான இந்திய ஓவர்சீஸ் வங்கி கிளையினை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்து இரண்டு பயனாளிகளுக்கு 47 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு தொழில் கடன் நிதி வழங்கினார். மேலும் ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மைய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தொடங்கிவைத்தார்.

கலெக்டர் பேசியதாவது: தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன், தேவையான கால கட்டங்களில் வங்கிக் கடனுதவியும் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு தொழில் முனைவோருக்கான பயிற்சி மையத்தின் மூலம் 506 பேருக்கு தையல் பயிற்சி, ஆடு வளர்த்தல், நாட்டு கோழி வளர்த்தல், ஓட்டுநர் பயிற்சி, கணினி பயிற்சி, மொபைல் ஃபோன் சர்வீஸ், ஃபோட்டோ மற்றும் வீடியோகிராஃபி, உணவுக்கலை பயிற்சி, குளிர்சாதனைப் பெட்டி பழுது நீக்குதல் பயிற்சி, காளான் வளர்த்தல், இயற்கை உரம் தயாரித்தல், பூச்செடி வளர்த்தல், சணல் பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் 18 வயது முதல் 45 வயது உள்ள ஆண் / பெண் இருபாலரும் சேர்ந்து பயன் பெறலாம். கடந்த ஆண்டில் மட்டும் பயிற்சி பெற்ற 280 பேர் குறு மற்றும் சிறு தொழில் மையங்களை உருவாக்கியுள்ளனர். இவர்களில் 74 பேருக்கு வங்கியின் மூலமாக 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இதுவரை 100 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு 21 பேருக்கு 43 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய தொழிலில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்குடன் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே பொது மக்கள் தங்கள் கல்வித்திறனுக்கு ஏற்றாற்போல் சுய தொழில்களை தேர்வு செய்து வங்கியின் மூலம் பயிற்சி பெறுவதுடன், கடனுதவியும் பெற்று சிறந்த தொழில் நிறுவனங்களை உருவாக்கி பலபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவன முதன்மை மேலாளர் கருப்பையா, ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மையக்க இயக்குநர் தமயந்தி, கரூர் பஞ். யூனியன் குழுத் தலைவர் திருவிகா, நபார்டு வங்கி மேலாளர் பார்த்திபன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us