தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரமற்ற உணவை சாப்பிடாமல் பட்டினி: மாணவியர் 16 பேர் மயக்கம்

தரமற்ற உணவை சாப்பிடாமல் பட்டினி: மாணவியர் 16 பேர் மயக்கம்

தரமற்ற உணவை சாப்பிடாமல் பட்டினி: மாணவியர் 16 பேர் மயக்கம்


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடாமல் பட்டினியாக கிடந்த மாணவியர் 16 பேர் வகுப்பறையில் மயங்கி விழுந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்த கலெக்டர், சமையலர்கள் இருவரை "சஸ்பெண்ட்" செய்து உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சியில் அரசு மகளிர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பழங்குடியின மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களில் மாணவியருக்கு என தனியாக பள்ளி அருகே விடுதி உள்ளது.

அதில் 97 மாணவியர் தங்கி, படித்து வருகின்றனர். அவர்களுக்கு தரமான உணவுகள் வழங்குவதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. அதேபோல் உணவில் புழுக்கள் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாணவியர் பலர் பல நாட்களாக சாப்பிடாமல் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்ட உணவு துர்நாற்றம் வீசியதுடன், புழுக்களும் கிடந்துள்ளது. அவற்றை பார்த்த மாணவியர் உணவை வெளியே கொட்டினர். நேற்று காலை 8.30 மணிக்கு, நேற்று முன்தினம் தயாரித்து மிச்சமான உணவுடன் கலந்து மாங்காய் சாதம் தயார் செய்து மாணவியருக்கு வழங்கினர்.

அதிலும் புழுக்கள் இருந்ததால் மாணவியர் சிலர் சாப்பிடாமல் பட்டினியுடன் பள்ளிக்குச் சென்றனர். இரண்டு நேரம் சாப்பிடாமல் பள்ளிக்குச் சென்ற மாணவியர், பசி மயக்கத்தில் ஒருவர் பின் ஒருவர் என 16 பேர் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, ஆர்.டி.ஒ. காளிமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார், சுகாதார துறை இணை இயக்குனர் ஜெமினி, தாசில்தார் இளங்கோ ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மாணவியரை பார்த்து ஆறுதல் கூறியதுடன் விசாரணை நடத்தினர்.

மேலும் விடுதிக்குச் சென்று சமையல் கூடம், குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து விடுதி வார்டன் (பொறுப்பு) சரோஜா, சமையலர்கள் ஜோதி, அழகுராணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். உணவு நியமன அலுவலர்கள், உணவு மாதிரியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

அதையடுத்து விடுதி காப்பாளர் சரோஜா வேறு விடுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். உணவு சமைப்பதில் மெத்தனமாக இருந்த சமையலர்கள் ஜோதி, அழகுராணி இருவரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us