தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட்காத கேள்விக்கு கட்டுரை எழுதி துணை கலெக்டரான நபர்

கேட்காத கேள்விக்கு கட்டுரை எழுதி துணை கலெக்டரான நபர்

கேட்காத கேள்விக்கு கட்டுரை எழுதி துணை கலெக்டரான நபர்


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பக்கங்களை நிரப்ப பசுவை பற்றிய கட்டுரை எழுதியவர் முழு மதிப்பெண் வாங்கி தேர்வில் பாஸ் செய்துள்ள விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த நபர் தற்போது துணை கலெக்டராகவும் பணியாற்றி வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் சில மாதங்களுக்கு முன் நடத்திய துணை கலெக்டருக்கான பிரதான தேர்வுகளில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கூறி அம்மாநில நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பிரதான தேர்வில் கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாத பதிலை எழுதிய பலருக்கு முழு மதிப்பெண் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.

உதாரணமாக பசுவைப் பற்றி தேர்வில் எந்த விதமான கேள்வியும் கேட்காத நிலையில் தேர்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் பக்கங்களை நிரப்புவதற்காக பசு குறித்த கட்டுரையை எழுதி உள்ளார். அதற்கும் முழு மதிப்பெண் கொடுக்கப்பட்டு உள்ளது.

பசு கட்டுரை எழுதிய அந்த நபர், தேர்வில் வெற்றி பெற்று தற்போது துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us