sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேசிய இளையோர் சதுரங்க போட்டியில் தமிழக வீரர் நவீன் கன்னா சாம்பியன்

/

தேசிய இளையோர் சதுரங்க போட்டியில் தமிழக வீரர் நவீன் கன்னா சாம்பியன்

தேசிய இளையோர் சதுரங்க போட்டியில் தமிழக வீரர் நவீன் கன்னா சாம்பியன்

தேசிய இளையோர் சதுரங்க போட்டியில் தமிழக வீரர் நவீன் கன்னா சாம்பியன்


UPDATED : நவ 03, 2014 12:00 AM

ADDED : நவ 03, 2014 11:30 AM

Google News

UPDATED : நவ 03, 2014 12:00 AM ADDED : நவ 03, 2014 11:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தேசிய அளவிலான இளையோர் சதுரங்க போட்டியில், தமிழக வீரர், நவீன் கன்னா சாம்பியன் பட்டம் வென்றார்.

தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில், தாம்பரத்தை அடுத்துள்ள, மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லுாரி ஆதரவுடன் தேசிய அளவிலான இளையோர் சதுரங்க போட்டி நடந்தது. அதில், 25 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒன்பதாவது மற்றும் இறுதி சுற்று போட்டி நடந்து முடிந்தது.

அதில், தமிழக வீரர்கள் நவீன் கன்னாவும், கணேஷ்பாபுவும் களம் இறங்கினர். அதில், இருவரும் போட்டியை சமனில் முடித்து, தலா ஏழு புள்ளிகள் பெற்றனர். மற்றொரு போட்டியில், தமிழக வீரர்கள் சரவண கிருஷ்ணனும், ராஜேசும் மோதினர். அதில், சரவண கிருஷ்ணன் ஏழு புள்ளிகளும், கணேஷ் பாபு ஆறு புள்ளிகளும், எடுத்தனர். ஆந்திர வீரர் கிருஷ்ணதேஜாவும், தமிழக வீரர் குமரனும் சந்தித்தனர். அதில், இருவரும் ஆட்டத்தை சமன் செய்து, தலா 6.5 புள்ளிகள் பெற்றனர்.

சாம்­பியன் கோப்­பை­யுடன் நவீன் கன்னா

தமிழக வீரர் ஷ்யாம் நிகிலும், கர்நாடக வீரர் குல்கர்னி விநாயக் மோதினர். அதில் ஷ்யாம் நிகில் ஏழு புள்ளியும், குல்கர்னி விநாயக் 5.5 புள்ளியும் எடுத்தனர். மகாராஷ்டிர வீரர் தஹாலே அதுல், தமிழக வீரர் நிதிசும் மோதினர். அதில், அதுல் 5.5 புள்ளியும், நிதிஷ் 6.5 புள்ளியும் எடுத்தனர். இந்த போட்டி யில், தமிழக வீரர்கள் நான்கு பேர் ஏழு புள்ளிகள் எடுத்து இருந்தனர். அவர்களின் முந்தைய சுற்று ஆட்டம் உள்ளிட்ட நுணுக்கங்களை வைத்து, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற, நவீன் கன்னாவுக்கு கோப்பை, பரிசுத்தொகை வழங்கப்பட்டது. போட்டியில், ஷியாம் நிகில், கணேஷ் பாபு, சரவண கிருஷ்ணன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.






      Dinamalar
      Follow us