தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை, வாசகம் ஒப்புவித்தல் போட்டிகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை, வாசகம் ஒப்புவித்தல் போட்டிகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை, வாசகம் ஒப்புவித்தல் போட்டிகள்


UPDATED : ஜன 19, 2015 12:00 AM

ADDED : ஜன 19, 2015 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2015 12:00 AM ADDED : ஜன 19, 2015 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியரிடையே, பேச்சு, ஓவியம், கட்டுரை, வாசகம் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும், 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, விபத்தில்லாமல், வாகனங்களை ஓட்டுவது; சாலை விதிகளை மதிப்பது குறித்த தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் கூறுகையில், "ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி, சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை மதிப்பது, விபத்து ஏற்படாத வகையில் வாகனங்களை ஓட்ட கையாள வேண்டிய முறைகள் போன்ற விஷயங்களை மாணவர்கள் தெரிந்து, போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்; இருப்பினும், தாங்கள் பெற்ற விழிப்புணர்வை, தங்களின் வீடுகளில் வாகனம் ஓட்டும் பெற்றோர், சகோதரர்களிடம் கூறி, அவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்றார்.

போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியரில் ஒவ்வொரு பிரிவிலும், முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் என, வரும் 21ம் தேதி, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கவுள்ள விழாவில் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us