அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
UPDATED : ஜன 19, 2015 12:00 AM
ADDED : ஜன 19, 2015 11:24 AM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் அனைவரும் அதிக மதிப்பெண்களுடன், தேர்ச்சிபெற, ஆசிரியர்களும், பெற்றோர்களும் கவனம் செலுத்துவது; பொங்கல் விடுமுறைக்கு பின், பள்ளி ஆண்டுவிழா, விளையாட்டு விழாவை சிறப்பாக நடத்துவது; பள்ளி நுழைவு வாயிலில், பொன்விழா வளைவு அமைக்க நடவடிக்கை எடுப்பது என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
