தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு காங்., நிர்வாகி பாராட்டு

தேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு காங்., நிர்வாகி பாராட்டு

தேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு காங்., நிர்வாகி பாராட்டு


UPDATED : நவ 11, 2020 12:00 AM

ADDED : நவ 11, 2020 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2020 12:00 AM ADDED : நவ 11, 2020 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தேசிய விருதுக்கு தேர்வான காட்டேரிக்குப்பம் பள்ளி ஆசிரியர்களை காங். நிர்வாகி முத்தழகன், நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
மத்திய அரசின் நீர் வள அமைச்சகத்தின், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், 2019ம் ஆண்டிற்கான சிறந்த நீர் மேலாண்மை விருதுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து ஏராளமான பள்ளிகள் கலந்து கொண்டன. இதில், காட்டேரிக்குப்பம், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி, நீர் மேலாண்மைக்கு தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. விருது வழங்கும் விழா, இன்று 11ம் தேதி மற்றும் 12ம் தேதி காணொலி காட்சி மூலம் நடக்கிறது.
காட்டேரிக்குப்பம் பள்ளி, தேசிய அளவிலான விருதுக்கு தேர்வாக, உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ரூபஸ், அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை, மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., நிர்வாகி முத்தழகன் சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார். நிகழ்ச்சியில் காங்., பிரமுகர்கள் ரவி, மஞ்சினி, குமார், தேவராசு மற்றும் காட்டேரிக்குப்பம் கிராம மக்கள் ஆசிரியர்களை வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us