தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.வி., பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் : மத்திய அமைச்சருக்கு தி.மு.க., கடிதம்

கே.வி., பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் : மத்திய அமைச்சருக்கு தி.மு.க., கடிதம்

கே.வி., பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் : மத்திய அமைச்சருக்கு தி.மு.க., கடிதம்


UPDATED : நவ 15, 2020 12:00 AM

ADDED : நவ 15, 2020 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2020 12:00 AM ADDED : நவ 15, 2020 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'கே.வி., பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் பாலு அனுப்பியுள்ள கடிதம்:

தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகள், கண்டனங்களை தெரிவித்த போதும், அமைச்சரவை ஒப்புதலுடன், இந்த கல்வியாண்டிலேயே, புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது கவலை அளிக்கிறது. புதிய கல்வி கொள்கைப்படி, 8ம் வகுப்பு வரை, தாய்மொழியோ அல்லது மாநில மொழியோ பயிற்று மொழியாக இருக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ஆனால், கேந்திரிய வித்யாலயா நிறுவனத்தின் திருத்தப்பட்ட கொள்கையின்படி, 20 அல்லது அதற்கு அதிகமான மாணவர்கள் விரும்பினால் மட்டுமே, கே.வி., பள்ளிகளில், தற்காலிய ஆசிரியர்களால் தாய்மொழியில் கற்பிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.தாய்மொழியை கற்பிப்பதற்கு ஏற்படுத்தப்படும் தடைகள், குழந்தைகளின் கல்வி கற்கும் திறனை வெகுவாக பாதிக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு, 21 - ஏ வின் படி, கல்வி கற்பது மாணவர்களின் அடிப்படை உரிமை.
ஹிந்தி மொழியை திணிப்பதற்காகவும், இந்தியாவை ஒரே மொழி நாடாக மாற்றுவதற்கும் வழிவகுக்கும் புதிய கல்வி கொள்கையை, தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கைப்படி, கே.வி., பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே, தாய் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கைகளை, மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us