தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீர்நிலை நச்சு அகற்றி குடிநீராக்கும் நுட்பம்: பாரதியார் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் அபாரம்

நீர்நிலை நச்சு அகற்றி குடிநீராக்கும் நுட்பம்: பாரதியார் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் அபாரம்

நீர்நிலை நச்சு அகற்றி குடிநீராக்கும் நுட்பம்: பாரதியார் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் அபாரம்


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆராச்சியாளர்களான அமீர், பேராசிரியர் விஸ்வநாதன் இணைந்து, இதற்கான ஒளிமின்னழுத்த ஆக்சிஜனேற்ற நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இதற்கு, இந்திய அரசின் காப்புரிமம் வழங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் மாசு அகற்றம், சுத்திகரிப்பு போன்ற ஆராய்ச்சிகளில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. சீரியம் ஆக்சைடு குவாண்டம் புள்ளியானது ஒளிக்கதிர் மற்றும் மின்வேதியியல் ஆக்சிஜனேற்றம் ஆகிய இரண்டு செயல்முறைகளின் கலவையால், சிறந்த ஒளிமின் வினையூக்கியாக செயல்படுகிறது. குறைந்த அளவில் காணப்படும் நச்சுக்கூறு மாசுக்களை கூட, இம்முறையால் நீக்கமுடியும். அதிக புகையிலை பயன்பாடு, மக்கள் தொகை பெருக்கம் மிக்க நம் போன்ற நாடுகளில், இக்கண்டுபிடிப்பு கழிவு நீர் மேலாண்மை மற்றும் மாசு கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும் என்கின்றனர், பல்கலை ஆராய்ச்சியாளர்கள்.பிரச்னைகளுக்கு தீர்வு!
பேராசிரியர் விஸ்வநாதன் கூறுகையில், இது மாசு கண்டறிதல் மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பல சுற்றுச்சூழல் சவால்களுக்கு, தீர்வுகளை வழங்குகிறது. இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக தண்ணீர் பற்றாக்குறை, நீர் மாசுபாடு மற்றும் தொற்றுநோய் தடுப்பு போன்ற சமூக பிரச்னைகளுக்கு, தீர்வு காணமுடியும், என்றார்.இது துவக்கமே!
காப்புரிமையின் முக்கியத்துவம் குறித்து துறைத்தலைவர் பொன்பாண்டியன் கூறுகையில், நானோ பொருட்கள் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் கழிவு நீரை உடைத்து, குடிநீருக்கு பயன்படும் சுத்தமான நீரை தயாரிப்பதற்கான, அதிநவீன ஆராய்ச்சின் துவக்கம் இது. எதிர்கால சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும், என்றார்.பல்கலை துணைவேந்தர் குழு உறுப்பினர் லவ்லீனா லிட்டில் பிளவர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஆராய்ச்சியாளர்களுக்கு பாரட்டுக்களை தெரிவித்தனர்.மக்கள் பயன்பாட்டுக்கு முன்னெடுப்பு
பாரதியார் பல்கலை காப்புரிமை மையத்தின் இயக்குனர் பரிமேலழகர் கூறுகையில், அடுத்த கட்டமாக இக்கண்டுபிடிப்பினை வணிகமயமாக்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us