தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுயநிதி கல்லுாரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., நிர்ணய சம்பளம் வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்

சுயநிதி கல்லுாரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., நிர்ணய சம்பளம் வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்

சுயநிதி கல்லுாரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., நிர்ணய சம்பளம் வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் தமிழ்நாடு சுயநிதி கல்லுாரி ஆசிரியர்கள் பாதுகாப்பு மாநாடு காமராஜ் பல்கலை கல்லுாரியில் மூட்டா அமைப்பு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடந்தது.மண்டல செயலாளர் ராபர்ட் திலீபன் வரவேற்றார். பொதுச் செயலாளர் நாகராஜன், மூட்டா முன்னாள் தலைவர் அனந்தகிருஷ்ணன் பங்கேற்றனர். மதுரை எம்.பி., வெங்கடேசன் கேரளம் போல் தமிழகத்திலும் சுயநிதி கல்லுாரி ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார்.மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுத்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், பட்டம் பெற மறுத்த பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ்ராஜ் பாராட்டப்பட்டனர்.மாநாட்டில், சுயநிதி கல்லுாரிகளை ஒழுங்குபடுத்த தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். இப்பிரிவு ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., நிர்ணயித்த சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயநிதி கல்லுாரிகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதிகாண் ஒப்புதலை பல்கலைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us