UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 10:18 AM
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புலிகள் பாதுகாப்பு பற்றி பயிற்சி பட்டறை நடந்தது.கோவை ஜூ அவுட்ரீச் அமைப்பு சார்பில் மாவட்ட கல்வித்துறை, வனத்துறை சார்பில் மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் டேனியல் புலிகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் வன விலங்குகளை பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பை உணர்த்த இப்பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி பசுமை படை ஆசிரியர்களுக்கு கற்பித்தல் கையேடு வழங்கி ஓவியம், வினா விடை, விழிப்புணர்வு மூலம் விளக்கி பேசினார். அனிமல் கேர் ட்ரஸ்ட் சார்பில் ரகு, ஷியாம் ஆசிரியர்களிடம் விளக்கினர். ஏற்பாடுகளை யு.எஸ்., பிஷ் அண்டு வைல்ட் லைப் சர்வீஸ் சார்பில் ஆர்வலர்கள் செய்திருந்தனர்.
