அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உடல் மீட்பு: விசாரணை தீவிரம்
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உடல் மீட்பு: விசாரணை தீவிரம்
UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 10:34 AM
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சின்சினாட்டியில் மேலும் ஒரு இந்திய மாணவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் பர்ட்யு பல்கலையில், நம் நாட்டின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பாக, பல்கலை., அருகே இறந்த நிலையில் நீல் ஆச்சார்யா உடல் மீட்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்காவின் சின்சினாட்டியில் நேற்று (பிப்.,01) மேலும் ஒரு இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீபத்தில், விவேக் ஷைனி என்ற இந்திய மாணவர், அங்காடி ஒன்றில் மது அருந்திய ஒரு நபரால், கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.