இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தம்
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:14 AM
புதுடில்லி:
இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமது பொருளாதாரங்கள் அனைத்து நாடுகளுக்கும் வெற்றிச் சூழ்நிலைக்கு உறுதியளிக்கும் எனக்கூறியுள்ளார்.ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பில் (இஎப்டிஏ), ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. டில்லியில், இந்தியாவுக்கும் இஎப்டிஏ இடையே வர்த்தக ஒப்பந்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு துணைத்தலைவராக பியூஷ் கோயல் இருந்தார். இந்த கூட்டத்தில் இந்தியா - இஎப்டிஏ இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பிறகு பியூஷ் கோயல் கூறுகையில், இஎப்டிஏ அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இதற்காக இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். இரு தரப்பும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் விதிகளை தளர்த்த வேண்டும் என்றார்.இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தம் ஒரு புதிய திருப்பம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கத்தருணமாகும். இந்தியா மற்றும் இஎப்டிஏ., இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார பங்களிப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.