வான் நோக்கு நிகழ்ச்சியில் சந்திரனை கண்டு மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்
வான் நோக்கு நிகழ்ச்சியில் சந்திரனை கண்டு மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்
UPDATED : மார் 28, 2024 12:00 AM
ADDED : மார் 28, 2024 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், வான் நோக்கு நிகழ்ச்சி வாயிலாக சந்திரன், நட்சத்திரங்களை கண்டு மகிழ்ந்தனர்.
மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஆர்வம் ஏற்படுத்தும் பொருட்டு, 2022ம் ஆண்டு டிச., மாதம் முதல் முறையாக, தொலைநோக்கி வாயிலாக, வான் நோக்கு நிகழ்ச்சி நடந்தது.
கடந்தாண்டு நவ.,-டிச., மாதங்களில், இந்நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், மேகமூட்டமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று தொலைநோக்கிகள் உதவியுடன் சந்திரன், வியாழன், இரு நட்சத்திரங்களை, 100 மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை கண்டு மகிழ்ந்தனர்.

