sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி ஆய்வகம், உணவு கூடங்களில் இயங்கும் வட்டார கல்வி அலுவலகங்கள்

/

பள்ளி ஆய்வகம், உணவு கூடங்களில் இயங்கும் வட்டார கல்வி அலுவலகங்கள்

பள்ளி ஆய்வகம், உணவு கூடங்களில் இயங்கும் வட்டார கல்வி அலுவலகங்கள்

பள்ளி ஆய்வகம், உணவு கூடங்களில் இயங்கும் வட்டார கல்வி அலுவலகங்கள்


UPDATED : ஏப் 06, 2024 12:00 AM

ADDED : ஏப் 06, 2024 08:44 PM

Google News

UPDATED : ஏப் 06, 2024 12:00 AM ADDED : ஏப் 06, 2024 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம், 14 ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும், அரசு தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் அரசு நலதிட்ட உதவிகளை கொண்டு சென்று சேர்ப்பதற்கு, ஒன்றியத்திற்கு ஒரு வட்டார கல்வி அலுவலகம் வீதம், 14 அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இதில், பூந்தமல்லி ஒன்றியத்தில் மட்டும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் உள்ளது. மீதமுள்ள, 13 கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் இல்லாமல், அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகம் மற்றும் உணவுக்கூடங்களில் தற்போது வரை இயங்கி வருகிறது.
வட்டார கல்வி அலுவலகங்கள் அரசு பள்ளி ஆய்வகம் மற்றும் உணவு கூடங்களில் இயங்கி வருவதால், மாணவர்கள் செய்முறை சோதனைகள் செய்ய முடிவதில்லை. மேலும் மதிய உணவு பொருட்கள் வைப்பதற்கும், சமைப்பதற்கும் கடும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் தமிழக பள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளி வளாகங்களில் இயங்கி வரும், அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் வரும் ஜூன் மாதம், 10ம் தேதிக்குள் காலி செய்து மாற்று இடத்திற்கு செல்ல வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் இயங்கி வரும் வட்டார கல்வி அலுவலகம், வாடகை கட்டடம் அல்லது அரசு துறைக்கு சொந்தமான கட்டடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் செயல்பாடுகள் கண்காணிப்பதிலும், அரசு நலதிட்ட உதவிகள் மாணவர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு, வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் அல்லது வாடகை கட்டடம் ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்பார்கின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

மாவட்டத்தில் பெரும்பாலான வட்டார கல்வி அலுவலகங்கள் அரசு பள்ளிகளில் தான் இயங்கி வருகிறது. தாலுகா மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாததால், ஒன்றிய அலுவலக வளாகம், அல்லது வாடகை கட்டங்களில் இயங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
தற்போது பள்ளி வளாகங்களில் தான் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலங்களுக்கு புதிய கட்டடம் கட்டியுள்ளன. இந்த அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்படுத்தலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டு செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us