sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதுச்சேரி பல்கலை., இன்போசிஸ் நிறுவனம் கல்வி, ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

/

புதுச்சேரி பல்கலை., இன்போசிஸ் நிறுவனம் கல்வி, ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி பல்கலை., இன்போசிஸ் நிறுவனம் கல்வி, ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி பல்கலை., இன்போசிஸ் நிறுவனம் கல்வி, ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : மே 31, 2024 12:00 AM

ADDED : மே 31, 2024 10:54 AM

Google News

UPDATED : மே 31, 2024 12:00 AM ADDED : மே 31, 2024 10:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
கல்வி, கண்டுபிடிப்பு தளங்களில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, புதுச்சேரி பல்கலைக்கழகம், இன்போசிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை வேந்தர் தரணிக்கரசு, பதிவாளர் ரஜநீஷ் பூட்டானி, சர்வதேச உறவுகள் டீன் சுப்ரமணிய ராஜி, கலாசாரம் மற்றும் கலாசார உறவுகள் இயக்குனர் கிளமண்ட் மற்றும் பேராசிரியர் சந்திர சேகரா ராவ் முன்னிலையில் நடந்தது.

பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு பேசுகையில், இந்த கூட்டாண்மை பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி அனுபவத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால தொழில்துறை வெளிப்பாட்டிற்கும் வழி வகுக்கும் என்றார்.

இன்போசிஸ் இணை துணை தலைவர் விக்டர் சுந்தரராஜ் பேசுகையில், இன்போசிஸில், திறமையை வளர்ப்பதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

புதுச்சேரி பல்கலைக் கழகத்துடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், திறமையான நிபுணர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும், பயனுள்ள கல்வி மற்றும் நடைமுறை முயற்சிகளை இயக்கவும் எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.

தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் செயற்கை நுண்ணறிவு நோக்கம் குறித்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் பேராசிரியர் சிவசத்யா எடுத்துரைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும், நுண்ணறிவு தொடர்பாக தொழில்நுட்பத்தை இன்போசிஸ் நிறுவனம் வழங்க உள்ளது.

தொழில் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் இடையே தொடர்ச்சியாக கலந்துரையாடல், கருத்தரங்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் வைதேகி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us